அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மிண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். ‘வலிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது. இதில் ஒரு சண்டைக் காட்சியையும் மற்றும் சில காட்சிகளையும் படமாக்கி முடித்தது படக்குழு. இந்தப் […]

Advertisements

விஜய் தற்போது நடித்துவரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. விஜய் சேதுபதி வீடியோ ஒன்றும் லீக் ஆகி சென்ற வாரம் வைரலானது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று தற்போது கசிந்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

நாயகன் சஞ்சயும், நாயகி மேக்னாவும் காதலித்து வருகிறார். இவர்களின் காதல் மேக்னாவின் வளர்ப்பு தந்தைக்கு பிடிக்காமல் போகிறது. இதனால், சஞ்சயை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார். இதே சமயம், மேக்னாவை மற்றொரு இளைஞர் காதலிக்கிறார். அவரின் காதலை ஏற்காததால் மேக்னாவை கடத்த திட்டமிடுகிறார்.இறுதியில் சஞ்சய், மேக்னா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சஞ்சயை மேக்னாவின் வளர்ப்பு தந்தை தீர்த்து கட்டினாரா? மேக்னாவை ஒருதலையாக காதலிப்பவரின் நிலைமை என்ன ஆனது? என்பதே […]

பிரபல நடிகை மீரா மிதுன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் எடுத்துக் கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழில் 8 தோட்டாக்கள் மற்றும் போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்தவர் மீரா மிதுன். பின்னர் பிக்பாஸ் சீசன் 3 –ல் கலந்துகொண்டு இயக்குனர் சேரனுடனான சர்ச்சை சண்டைகளால் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி ரசிகர்களோடு […]

முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் கம்ரேட்’, மகேஷ் பாபுவுடன்  ‘சரிலேரு நீக்கெவரு’ படத்திலும் நடித்திருந்த ராஷ்மிகா தமிழில் விஜய்க்கு ஜோடியாக […]

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அனிமேஷன்களை உருவாக்கி பொன்னியின்செல்வன்பாகம் 1’ எனும் அனிமேஷன் படம் உருவாகியுள்ளது. கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்.ஜி.ஆர் 40 வருடங்களுக்கு முன்னதாக முயற்சி செய்தார். அதற்காக இயக்குனர் மகேந்திரன் திரைக்கதை அமைத்துக் கொடுத்தார். அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த முயற்சி கைகூடவில்லை. இதனையடுத்து இப்போது மணிரத்னம் அந்த முயற்சியில் வெற்றி கண்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார். […]

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது புதிய படத்தை தமிழகத்தில் விளம்பரம் செய்ய பேட்டியளித்திருந்தார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மகேஷ் பாபு தனது கல்லூரி காலத்தை சென்னையில் தான் கழித்தார். சூர்யா, கார்த்தி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலருடன் சென்னை லயோலா கல்லூரியில் படித்த அனுபவத்தையும் அந்த […]

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்து வருவது உறுதியாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தலைவி’. இந்தப் படம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் படமாகும். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து […]

Actress HD Images

Advertisements