ரஜினிகாந்த்தின் 168வது படமான தர்பார் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்பட பலர் நடித்து வரும் புதிய படம் தர்பார். இந்தப் படத்தின் முதல் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் டிரெண்டிங் ஆகின. சும்மா கிழி கிழி என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ரஜினியின் சிங்கிள் பாடலும் வெளியிடப்பட்டது. கடந்த 7ம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா […]

Advertisements

ஜமைக்கா பெண் உலக அழகியானார்… இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.69-வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20ந் தேதி தொடங்கியது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றதில், பல்வேறு போட்டிகளுக்குப் பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர். உலக அழகி யார் என்பதை […]

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள சைக்கோ படத்தின் டைட்டிலை மாற்ற சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம், சைக்கோ. மிஷ்கின் இயக்குகிறார். உதயநிதி ஹீரோவாக நடிக்கிறார். அதிதி ராவ், நித்யா மேனன், ராம், சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர். மிஷ்கினின், நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களுக்குப் பிறகு இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. இதில் உதயநிதி, பார்வையற்றவராக நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் […]

 ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யாதயாரிப்பு – கிரின் சிக்னல் இயக்கம் – எஸ்.ஏ.சந்திரசேகர்வெளியான தேதி – 13 டிசம்பர் 2019நேரம் – 2 மணி நேரம் 13 நிமிடம்ரேட்டிங் – அதற்குத் தகுதியில்லாத ஒரு படம்தமிழ் சினிமாவின் சாபக் கேடாக எப்போதாவது ஒரு முறை மிக மோசமான, கீழ்த்தரமான படங்கள் வெளிவரும். இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு நல்ல படத்தைக் கொடுத்து, எப்படியாவது நாமும் பேசப்பட மாட்டோமா என ஏங்கிக் […]

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.மேலும், படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை என அஜித்தை மிகவும் ஸ்டைலாக காட்டிய படம் ‘பில்லா’. இப்போதும் அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மிகவும் பிரபலம். இன்று (டிசம்பர் 14) இந்தப் படம் வெளியாகி 12 ஆண்டுகளாகிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாக விஷ்ணுவர்தன் தனது ட்விட்டர் பதிவில், “வாவ்! ‘பில்லா’ வெளிவந்து 12 ஆண்டுகள் […]

‘தர்பார்’ ட்ரெய்லர் வெளியீடு எப்போது என்பதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 7-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி ‘தர்பார்’ ட்ரெய்லர் வெளியாகும் […]

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததால், படம் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம், க்ளோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருக்கிறது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால், பலமுறை இந்தப் படம் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுத் […]

நடிகர் அக்‌ஷய் குமார் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை கரீனா கபூர் உடன் இணைந்து பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கரீனா கபூருக்கு பரிசாக வெங்காய தோடு வழங்கப்பட்டது. அந்த வெங்காய தோடை கரீனா கபூர் பெரிதாக விரும்ப வில்லை. இதனால் அக்‌ஷய் தனது மனைவிக்காக அதை கேட்டு வாங்கி வந்துள்ளார். இதுகுறித்து அக்‌ஷய் குமாரின் மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘எனது கணவர் […]

சென்னை: துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வரும் நடிகர் விஷால், அடுத்ததாக ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நாயகியாக நடித்துள்ள ரித்து வர்மா ஜோடி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டோலிவுட் நடிகையான ரித்து வர்மா நடிப்பில் வெளியான பெலி சூப்புலு படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. […]

சென்னை: என்னை பெரிய ஆளாக்க வேண்டாம், உங்களின் வேலையை பார்த்தாலே போதும் என நடிகர் சித்தார்த் அமைச்சரை சாடியிருக்கிறார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்ததற்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் இந்த விவகாரத்தில் அவர் கடுமையாக சாடி டிவிட்டியிருந்தார்.ஜெயலலிதா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஒருபோதும் ஆதரித்திருக்க மாட்டார். அவர் இல்லாமல் அதிமுக நெறி தவறி சீரழிந்திருக்கிறது என்றும் டிவிட்டியிருந்தார் […]

%d bloggers like this: