தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. பாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற […]

Advertisements

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். ரஜினியுடன் நடித்துள்ள தர்பார் படம் இன்று வெளியாகி இருக்கிறது. கடந்த வருடம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 16 படங்கள் அவர் கைவசம் உள்ளன.கூர்கா படம் மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்துள்ளார். வடிவேலு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள தடையும் சந்தானம் கதாநாயகனாக மட்டுமே நடிப்பது […]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் கூட்டணியில் மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் திரைப்படத்தை அடுத்து, தனுஷ் தற்போது ‘பட்டாஸ்’ திரைப்படத்தி வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். அதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 40-வது திரைப்படத்தின் ஷூட்டிங்கையும் முடித்துள்ளார் தனுஷ். இன்னும் பெயர் சூட்டப்படாத தனுஷ்40 படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தனது 41-வது திரைப்படத்தின் வேலைகளில் இறங்கியுள்ளார் தனுஷ். […]

அஜித்திடம் கற்ற பெரிய பாடம் என்ன என்பது குறித்து ரசிகர்களிடம் கலந்துரையாடும்போது ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார். லால் ஜுனியர் இயக்கத்தில் ப்ரித்விராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாளப் படம் ‘டிரைவிங் லைசன்ஸ்’. நடிகருக்கும் அவரது ரசிகருக்கும் இடையே நிகழும் கதையே இந்தப் படம். இதனை விளம்பரப்படுத்த தன் ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடையக் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் ப்ரித்விராஜ். இந்த நிகழ்வில் ரசிகர் ஒருவர் அஜித் […]

நடிகர் சூர்யா நடித்த ’காப்பான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’சூரரைப்போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் ஹரி இயக்கத்தில் உருவாகும் ஒரு அதிரடி ஆக்ஷன் குடும்ப சென்டிமென்ட் படத்திலும், அதனை அடுத்து கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் […]

அஜித் டிவிட்டருக்கு வர வேண்டும் என்றும் டுவிட்டரில் அவர் கணக்கு தொடங்க வேண்டும் என்றும் விட்டர் இந்தியாவின் மேனேஜிங் டைரக்டர் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தல அஜித் அவர்கள் தான் நடிக்கும் திரைப்படங்களில் பூஜை, புரமோஷன் உள்பட எந்த விழாவுக்கும் வரமாட்டார் என்பது தெரிந்ததே. மேலும் அவருக்கு பேஸ்புக், டுவிட்டர் உள்பட எந்த ஒரு சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை என்பதும், ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது […]

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளார் விஷால். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், துப்பறிவாளன் 2 படத்தின் முதல் லெக் முடிவடைந்து இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் . நடிகர் விஷால் அயோக்யா மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு பிறகு நடித்து வரும் படம்தான் துப்பறிவாளன் 2 .இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முடிந்ததால் தற்போது […]

சிம்புவுக்கு வில்லனாக நடிக்க, கன்னட ஹீரோ சுதீப் ஓ.கே.சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தொடங்க இருப்பதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே அறிவித்திருந்தார். படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது இதனால் படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார், சுரேஷ் கமாட்சி. இந்நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையிலான பிரச்னையை தயாரிப்பாளர்கள் சிலர் பேசி தீர்த்தனர். இதையடுத்து, படத்தை மீண்டும் தயாரிக்க […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒப்பந்தமான ‘தலைவர் 168’ படத்தின் சம்பளம் ரூ.100 என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.இந்த நிலையில் அவர் தன்னுடைய பேரன்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 90 கோடி மதிப்புள்ள பணத்தை பிக்சட் டெபாசிட்டில் டெபாசிட் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதுசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 3 பேரன்கள் உள்ளனர். ஐஸ்வர்யா தனுஷுக்கு […]

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், சமூக ஆர்வலர், நடன இயக்குநர் என பன்முகங்களை கொண்டவர் ராகவா லாரன்ஸ் ஒரு நடிகராக தன் நடிப்பிற்காக பெறும்  விருதுகளை விட அந்நடிகரின் சமூக சேவைகளுக்காக பெறும் விருதுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் நடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருதை வழங்கி கெளரவித்திருக்கிறது தாயன்பு ட்ரஸ்ட்.  சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவைசெய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் […]

Advertisements