அந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்

Advertisements

சென்னை: காமெடி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் தயங்குகிறார்களாம். காமெடி நடிகர் ஒருவர் சுபயோக சுபதினத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டதா என்று சிலர் கிண்டல் செய்தனர். அதை எல்லாம் நடிகர் காதில் வாங்கவில்லை.

Advertisements

அவரை தேடி தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பெரிய லெவலுக்கு வர வேண்டும் என்று நடிகர் விரும்புகிறார். தான் இத்தனை ஆண்டுகளாக பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்று நடிகர் நிம்மதியில் உள்ளார். நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆள் கிடைப்பது தான் கஷ்டமாக உள்ளதாம். இந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று நடிகைகள் முகத்தில் அடித்தது போன்று கூறிவிடுகிறார்களாம். இல்லை என்றால் பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறார்களாம். மார்க்கெட் இல்லாத நடிகைகள் கூட அந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க பெரிய தொகையை கேட்பது தான் தயாரிப்பாளர்களை அதிர வைக்கிறது. நடிகருக்கு ஜோடி தேடுவதற்குள் தயாரிப்பாளர்களுக்கு கண்ணை கட்டிக் கொண்டு வருகிறதாம். ஹீரோவான பிறகு நடிகர் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார். அவர் தற்போது நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை உடனே சம்மதம் தெரிவிக்கவில்லையாம். பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பெரிய தொகை அளிக்க ஒப்புக் கொண்ட பிறகே நடிகை ஓகே சொல்லியுள்ளார். காற்றிருந்த போது தான் தூற்றவில்லை இப்போதாவது செய்யலாம் என்று நடிகை வெயிட்டான தொகையை வாங்கியிருக்கிறார்

Advertisements
Advertisements

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

நிரந்தரமாக உடல் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்!

Tue Jul 30 , 2019
Advertisements
%d bloggers like this: