ச்சே.. சாண்டி இவ்ளோ மோசமானவரா.. மூக்கில் ரத்தம் வரும்படி மனைவியை இப்படியெல்லாம் கொடுமைபடுத்தினாரா?

சென்னை: பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குனர் சாண்டி, முன்பு தான் எப்படியெல்லாம் சுயநலவாதியாக இருந்தேன் என கூறியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், ஜாலியாக சுற்றி வருபவர் சாண்டி மாஸ்டர். அதன் காரணமாகவே ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் அவர் டியராகி விட்டார். இந்த சீசனின் டைட்டில் வின்னர் என கணிக்கப்படுபவர்களின் பட்டியலில் முதல் பெயர் சாண்டி தான். அதற்கு அடுத்து தான் லாஸ்லியா, சேரன் எல்லாம் இருக்கிறார்கள். காரணம் எப்போதும் தானும் ஜாலியாக இருந்து, மற்றவர்களையும் ஜாலியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் மொட்டக் கடிதாசி டாஸ்க் மூலம் தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தினார் சாண்டி. டான்ஸ் ஆடுவது, கலாய்ப்பதை தவிர்த்து அவருக்கு உறவுகள் மீது உணர்வுகள் இருக்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு சாண்டி சொன்ன பதில் தான் செம ஷாக்கிங்.

Advertisements

சிறு வயதில் இருந்தே எந்த பிரச்சினையிலும் தலையிட மாட்டாராம் சாண்டி மாஸ்டர். அவருடைய அப்பா, அம்மா சண்டைப் போட்டுக்கொண்டு இருந்தால், என்ன ஏது என கேட்கமாட்டராம். வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீடு தங்காமல் வெளியே சென்றுவிடுவாராம்

மனைவிக்கு எந்த வேலையும் செய்து கொடுக்கமாட்டராம் சாண்டி. அவர் காய்கனிகள் வெட்டிக்கொண்டிருக்கும் போது காலால் டீப்பாயை தள்ளிவிடுவாராம். மேலும் அதிகமாக கோபப்படுவாராம். தனது சந்தோசம் மட்டுமே முக்கியம் என சுயநலவாதியாக இருப்பாராம். மற்றவர்களைக் காயப்படுத்தும்படி தான் பேசுவாராம்.

Advertisements

ஒருமுறை அதிக கோபத்துடன் மனைவியை திட்டி விட்டாராம். இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதாம். அதாவது, கோபப்பட்டு பேசினால் சாண்டியின் மனைவிக்கு மூக்கில் ரத்தம் வர ஆரம்பித்து விடுமாம். அன்றைய தினம் ஒரு துண்டு நனையும் அளவுக்கு நிற்காமல் ரத்தம் வந்து கொண்டே இருந்ததாம். அப்போது அவரது செல்ல மகள் கைக்குழந்தையாம். இந்த சூழ்நிலையில் மனைவியை இப்படி காயப் படுத்தி விட்டோமே என்று மிகவும் வருத்தப்பட்டாராம்.

அன்றைய தினத்தில் இருந்து தனது குடும்பத்துக்காக வாழ ஆரம்பித்து விட்டதாகவும், தற்போது பிக் பாஸ் வீட்டில் தான் வேலைகள் எல்லாம் செய்வதை பார்த்து தனது மனைவி நிச்சயம் சந்தோஷப்படுவார் என்றும் சாண்டி கூறினார். இதைக் கூறும் போது அவர் கண்கலங்கினார். எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்த சாண்டி மாஸ்டரையும் அழ வைத்து சாதனை படைத்துவிட்டார் பிக் பாஸ்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

Bigil - Motion Poster | Vijay, Nayanthara | Sabari Ramiro | Instinct Designs

Fri Aug 2 , 2019
Motion Graphics by Sabari Ramiro(Instinct Designs). Advertisements
%d bloggers like this: