நானும் இந்தியன் 2 ஹீரோயின்: ப்ரியா பவானி சங்கர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது

இந்நிலையில் கமல் ஹாஸன் படத்தில் நடிப்பதை உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார் ப்ரியா. படம் குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, நான் ஷங்கர் சார் அலுவலகத்திற்கு சென்றேன். 2 மணிநேரம் கதை சொன்னார்கள். என் கதாபாத்திரம் குறித்து தெரிந்த பிறகு அசந்து போய்விட்டேன். ஹீரோயின்களில் நானும் ஒருவர். உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். ஷங்கர் சார் இயக்கத்தில் கமல் சார், சித்தார்த், காஜல் அகர்வால் ஆகியோருடன் சேர்ந்து நடிப்பது ஆசிர்வாதம் என்கிறார் ப்ரியா. அவரின் கதாபாத்திரம் படம் முழுக்க வரும் என்று கூறப்படுகிறது. இது தவிர்த்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் விக்ரம் 54 படத்தில் சீயானுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ப்ரியா. அடுத்தடுத்து அவர் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கிறார்

சின்னத்திரையில் இருந்தபோதே ப்ரியா பவானி சங்கருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். பெரிய திரைக்கு வந்ததும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது. அவரின் வளர்ச்சியை பார்த்து அவரை விட அவரின் ரசிகர்கள் தான் அதிகம் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படிப்பட்ட பாசக்கார ரசிகர்கள் கிடைக்க ப்ரியா பவானி சங்கர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Advertisements

Next Post

Actress Priya Bhavani Shankar HD Photos

Thu Aug 8 , 2019
Advertisements
%d bloggers like this: