விஜய்சேதுபதியுடன் நடிப்பது ரொம்ப கஷ்டம்ங்க”.. மேடையிலேயே ஓப்பனாகக் கூறிய மணிரத்னம் பட நாயகி!

Advertisements

சென்னை: விஜய் சேதுபதியுடன் நடிப்பது சவாலான விஷயம் என நடிகை அதிதி ராவ் ஹெய்தரி தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதி அதிதிராவ் ஹெய்தாரி நடிக்கும் புதிய படம் துக்ளக் தர்பார். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பார்த்திபன் – விஜய் சேதுபதி கூட்டணி இதில் மீண்டும் இணைகிறது. இப்படத்தை புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். இயக்குகிறார். இப்படத்தின் துவக்க விழா சென்னை வடபழனியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அதிதி ராவ் ஹெய்தாரி, செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதியின் நடிப்பை வியந்து பார்த்ததாகக் கூறினார்

மேலும், அப்போது அவர் பேசியதாவது, “மீண்டும் சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கும் மிகவும் ஸ்பெஷலான நகரம் இருந்து. துக்ளக் தர்பார் எனக்கு ஸ்பெஷலான படம். விஜய் சேதபதியுடன் நடிக்க வேண்டும் என துடிதுடித்துக் கொண்டிருந்தேன்.

செக்கச் சிவந்த வானம் பட ஷூட்டிங்கின் போது, எனக்கு காட்சியே இல்லை என்றாலும், விஜய் சேதுபதி நடிப்பதை பார்ப்பதற்காக செட்டுக்கு போவேன். அவர் நடிப்பதை பிரமித்து போய் பார்த்தேன்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிப்பது மிகப் பெரிய சவால். அவருடைய நடிப்புக்கு ஈடுகொடுத்து நடிப்பது கடினமான விஷயம். இந்த படத்தின் மூலம் அவரிடம் இருந்து நிறைய கற்றிக்கொள்வேன் என நினைக்கிறேன்.

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளனுக்கு இது தான் முதல் படம். அவருடன் வேலை பார்க்கவும் ஆவலாக இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அதை இந்த படத்திற்கும் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Credits: One India Tamil

Advertisements

Next Post

பிக்பாஸில் இருந்து வெளியே போனது இவர்தான்! லேட்டஸ்ட் தகவல்.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்

Sun Aug 4 , 2019
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார் என்பது பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் சாக்ஷி, கவின், மதுமிதா, அபிராமி மற்றும் ரேஷ்மா எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர். அவர்களில் மதுமிதா காப்பாற்றப்படுவதாக கமல் சனிக்கிழமை எபிசோடில் அறிவித்துவிட்டார். இந்நிலையில் தற்போத ரேஷ்மா பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது. கவின் அல்லது சாக்‌ஷி ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத இந்த […]
%d bloggers like this: