பொங்கல் ரிலீஸ் தர்பாருடன் மோதும் இரண்டு படங்கள்..!

பொங்கலுக்கு ரஜினியின் தர்பார், தனுஷின் பட்டாஸ் மற்றும் சிவாவின் சுமோ ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். உலகலவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இப்படம் 2020 பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகிறது.

ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘பட்டாஸ்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேரீன் பிர்ஜாதா மற்றும் சிநேகா நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் விவேக்-மெர்வின் கூட்டணி இசையமைத்துள்ளனர். ‘அசுரன்’ வெற்றியையடுத்து தனுஷின் இப்படமும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமும் பொங்கல் விடுமுறைக்கு ஜனவரி 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிப்ரவரி 14 படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் சிவா நடித்துள்ள படம் ‘சுமோ’. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்திற்கு நடிகர் சிவா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படமும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Next Post

"தளபதி 64" படத்தின் அட்டகாசமான டைட்டில் வெளியானது..

Tue Dec 31 , 2019
தளபதி விஜய் நடித்துவரும் 64வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தெரிந்ததே. சென்னை, டெல்லி மற்றும் ஷிமோகா ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி 2ம் தேதி முதல் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் விஜய், விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் […]
%d bloggers like this: