இயக்குனர் ‘சிம்புதேவன்’ படத்தில் 3 நாயகிகள்..!

விஜய் நடித்த ’புலி’ படத்தை இயக்கிய சிம்புதேவன் தற்போது ’கசடதபற’ என்ற படத்தை இயக்கி வருகிறார். வெங்கட்பிரபு தயாரித்து வரும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சாந்தனு முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஏற்கனவே இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் ரெஜினா ஆகிய இருவர் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் தற்போது புதியதாக இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் விஜயலட்சுமி இணைந்துள்ளார்மேலும் இந்த படத்தில் 6 இசையமைப்பாளர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள், 6 படத்தொகுப்பாளர் பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், சீன் ரோல்டன், சந்தோஷ் நாராயணன், மற்றும் ஜிப்ரான் ஆகிய 6 இசையமைப்பாளர்கள் பணிபுரிய உள்ளதாகவும் இந்த படமே ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறதுஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இசையமைப்பாளர், ஒரு ஒளிப்பதிவாளர், ஒரு படத்தொகுப்பாளர் என பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisements

fogpriya

Next Post

துபாயில் மாடியில் இருந்து விழுந்து இந்திய சிறுமி உயிரிழப்பு..!

Tue Dec 10 , 2019
மேற்காசியாவில் ஐக்கிய அரபு எமிரேட்சிலிருக்கும் ஷார்ஜாவில் 16 வயது இந்தியச் சிறுமி ஆறு மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.உம் அல் குவைன் பகுதியில் பெற்றோருடன் வசித்த அப்பெண் சில காலம் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் கூறியதாவது: இறந்த சிறுமி இரண்டு மாதங்களாக தீவிர தலைவலி மற்றும் மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் வசித்து வந்த ஆறாவது மாடியில் […]

Actress HD Images

%d bloggers like this: