நடிகை ஐஸ்வர்யா ராய் என் அம்மாதான்… சொன்னா நம்புங்க…என்னுடன் வசிக்கணும்…. சர்ச்சை கிளப்பும் வாலிபர்…

நடிகை ஐஸ்வர்யா ராய் என் அம்மாதான் என்று வாலிபர் ஒருவர் மீண்டும் புயல் கிளப்பியுள்ளார். மங்களூரைச் சேர்ந்தவர் சங்கீத்ராய் குமார் (32). பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னை பெற்றெடுத்த தாய் என்று கடந்த ஆண்டு இவர் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில், ஐஸ்வர்யா ராய் செயற்கை கருத்தரித்தல் மூலம் லண்டனில் 1988 ஆம் ஆண்டு என்னை பெற்றெடுத்தார் (அவர் சொல்லும் வருடத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதுதான்) என்று கூறி அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

என் அம்மா ஐஸ்வர்யா ராய்க்கு 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனுடன் திருமணமானாலும் அவர் தனியாக வசித்து வருகிறார். அவர் என்னுடன் வசிக்க வேண்டும். என் அம்மாவை மிஸ் பண்ணுகிறேன். என் அம்மாவின் செல்போன் நம்பரையாவது தர வேண்டும். எனக்கு என் அம்மா வேண்டும்’ என்று கூறியிருந்தார் சங்கீத் ராய் குமார். ஆனால், ஐஸ்வர்யாதான் தனது அம்மா என்பதை நிரூபிக்க அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இதை மீண்டும் கூறியிருக்கிறார் சங்கீத்குமார். அதில், இரண்டு வயது வரை என்னை என் பாட்டி பிருந்தா ராயும் தாத்தா கிருஷ்ணராஜ் ராயும் பார்த்துக்கொண்டனர். பின்னர் என் தந்தை வடிவேலு ரெட்டி விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அங்கு வளர்ந்தேன். எனது உறவினர்கள் என் பிறப்பு சான்றிதழ்களை அழித்துவிட்டனர். நான் மும்பையில் என் அம்மா ஐஸ்வர்யா ராயுடன் வசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Next Post

திரௌபதி படத்திற்கு வாழ்த்துக் கூறினாரா அஜித்... பரவி வரும் வதந்தியால் பரபரப்பு...இயக்னர் ஜி. மோகன் என்ன கூறுகிறார்....

Tue Jan 14 , 2020
சமீபத்தில் வெளியான திரௌபதி படத்தின் டிரைலர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த படத்தை வெற்றிப் படமாக்கியே தீருவோம் என்று இன்னொரு பிரிவினர் கங்கணம் கட்டிக்கொண்டு, படம் ரிலீஸ் ஆகும் முன்னரே வாழ்த்து போஸ்டர்களை அடித்து ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த படம் வெளிவந்தாலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் […]

You May Like

%d bloggers like this: