ஆர்யா படத்தில் மசூம் ஷங்கர் நடிகைக்கு ஸ்பெஷல் ரோல்..!

ஜெயம் ரவி நடித்த ‘மிருதன்’,‘டிக் டிக் டிக்’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் ‘டெடி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ‘90ML’ நடிகை நடித்துள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் ஆர்யா நடித்து வரும் ‘டெடி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆர்யாவின் மனைவி சாயீஷா நடித்துள்ளார். மேலும், கருணாகரன், சதீஷ் ஆகியோருடன் பிரபல திரைப்பட இயக்குநர் மகிழ்திருமேனி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். ‘டெடி’ திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஓவியா நடிப்பில் வெளியான ‘90ML’ திரைப்படத்தில் 5 பெண்களில் ஒருவராக நடித்திருந்த மசூம் ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் தனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்ததுடன், ஆர்யா, கருணாகரன் உள்ளிட்டோருடன் நடித்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் மசூம் தெரிவித்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

'ஜடா' படம் பற்றி நடிகர் கதிர் அதிரடி பேச்சு..!

Thu Nov 28 , 2019
தளபதி விஜய்யின் ‘பிகில்’ படத்தில் ஃபுட் பால் வீரராக கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதனையடுத்து ‘ஜடா’ எனும் படத்தில் கதிர் நடித்துள்ளார். இந்த ஜடா திரைப்படமும் ஃபுட் பால் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தை தி போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிக்க குமரன்.ஏ இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் […]
%d bloggers like this: