பிரபல நடிகர் “தலைவாசல் விஜய்”- ன் மகள் செய்த சாதனை! பதக்கம் வென்று அசத்தல்..!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீணா விஜய் நடப்பாண்டிற்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தலைவாசல் விஜய் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவராக விளங்குகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர் தலைவாசல் விஜய் கடைசியாக 100% காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேபாளத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடினர். நம்முடைய இந்தியா சார்பில் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணா விஜய் நீச்சல் போட்டியில் பங்கேற்று வெள்ளியை வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஜெயவீணா இதற்கு முன் தேசிய மற்றும் சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் மடல்களையும் வாங்கிக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 12 வயது இருக்கும் போதே தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை வென்று இளம் வயதில் நீச்சல் வீராங்கனையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் இத்தகைய சாதனையை செய்துள்ளது என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த செய்தியானது வைரலாக பரவி வருகிறது.

Advertisements

fogpriya

Next Post

சீமானுக்கு ராகவா லாரன்ஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை..!

Fri Dec 13 , 2019
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அவ்வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ரஜினிகாந்த் பிறந்த நாளை ஒட்டி ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலைப்புலி எஸ் தாணு, கேஎஸ் ரவிக்குமார், பி வாசு ,மீனா, […]
%d bloggers like this: