மனைவிக்கு விலையுயர்ந்த பரிசளித்த நடிகர் அக்‌ஷய்குமார்..!

நடிகர் அக்‌ஷய் குமார் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை கரீனா கபூர் உடன் இணைந்து பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கரீனா கபூருக்கு பரிசாக வெங்காய தோடு வழங்கப்பட்டது. அந்த வெங்காய தோடை கரீனா கபூர் பெரிதாக விரும்ப வில்லை.

இதனால் அக்‌ஷய் தனது மனைவிக்காக அதை கேட்டு வாங்கி வந்துள்ளார். இதுகுறித்து அக்‌ஷய் குமாரின் மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘எனது கணவர் எனக்காக இந்தப் பரிசை வாங்கி வந்துள்ளார். முதலில் அந்த நிகழ்ச்சியில் கரீனாவுக்கு வழங்கப்பட்ட இந்தக் காதணியை அவர் பெரிதும் விரும்பவில்லை போல. எனக்கு பிடிக்கும் என நினைத்து இதை அக்‌ஷய் வாங்கி வந்துள்ளார். சில நேரங்களில் சின்ன சின்ன வி‌ஷயங்கள் கூட உங்கள் மனதை கவரலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

பிரச்சினைகள் முடிவுக்கு வந்தது..விரைவில் வெளியாகும் "நெஞ்சம் மறப்பதில்லை"

Sun Dec 15 , 2019
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததால், படம் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம், க்ளோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருக்கிறது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால், பலமுறை இந்தப் படம் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுத் […]

Actress HD Images

%d bloggers like this: