பிரபல நடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை.. நடந்தது என்ன?

நடிகர் ஆனந்தராஜின் தம்பியான கனகசபை என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனம், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை என மாறுபட்ட நடிப்பால் சாதித்தவர் ஆனந்தராஜ். இவரது தம்பி கனகசபை. இவர் பாண்டிச்சேரியில் வசித்து வந்துள்ளார்.

கனகசபை

இந்நிலையில் இன்று தனது வீட்டின் படுக்கை அறையில் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணச்செயதி குடும்பத்தார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும் அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தற்கொலை பற்றி தகவல் அறிந்த பெரியகடை போலீசார் கனகசபையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Next Post

"ஜிப்ஸி" சினிமா விமர்சனம்..!!

Fri Mar 6 , 2020
Advertisements
%d bloggers like this: