மனைவியை அடித்த சின்னத்திரை நடிகர் கைது..!

சென்னை திருவான்மியூரில் மனைவியைத் தாக்கிய சின்னத்திரை நடிகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதிருவான்மியூர் ஏரிக்கரைச் சாலையை என்ற பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் சின்னத்திரையில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஐஸ்வர் ரகுநாதன் என்பவரும் சின்னத்திரையில் நடிகராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மனைவி ஜெயஸ்ரீயின் சில சொத்து ஆவணங்களை வைத்து அவருக்கே தெரியாமல் ஐஸ்வர் கடன் பெற்றதாக தெரிகிறது. இதுபற்றி சமீபத்தில் தெரிந்து அதிர்ச்சி அடைந்த ஜெயஸ்ரீ அவரிடம் கேட்ட போது ஆத்திரமடைந்த ஐஸ்வர், ஜெயஸ்ரீயைத் அடித்துள்லதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர் மற்றும் அவரது தாயார் சந்திரா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனால் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisements

fogpriya

Next Post

சிவகார்த்திகேயனின் "டாக்டர்" படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பு..!

Tue Dec 3 , 2019
சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ’டாக்டர்’ என்ற திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் மற்றும் ’ஹீரோ’ தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ’டாக்டர்’ படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் என்றும், படத்தொகுப்பாளர் […]

You May Like

%d bloggers like this: