அருண் விஜய் நடித்துள்ள “மாஃபியா” ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.

இந்நிலையில் அருண் விஜய்யை நாயகனாக வைத்து மாஃபியா படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது .படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பிப்ரவரி 21-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று படத்தின் இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisements

Next Post

நீல நிற புடவையில்..ஏய் படத்துல பார்த்த மாதிரியே..அலையவைக்கும் நமிதாவின் கவர்ச்சி புகைப்படங்கள்..!!

Sun Jan 26 , 2020
நமிதா அவர்கள், எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். […]
%d bloggers like this: