ரொமான்டிக் தலைப்புடன் களமிறங்கும்…. அதர்வாவின் ‘ தள்ளிப் போகாதே ‘ பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!!

நடிகர் அதர்வாவின் தள்ளிப் போகாதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் அதர்வா முரளியின் அடுத்த படம் தள்ளிப் போகாதே. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரையும் டைட்டிலையும் பார்க்கும்போது இது காதல் படம் என்பது உறுதியாகிறது.

தள்ளிப் போகாதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் அதர்வா. அதர்வா வெளியிட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

தள்ளிப் போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இவர் ப்ரேமம் மலையாளம் படம் மூலம் பிரபலமானவர். அதன் பின்னர் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். தள்ளிப் போகாதே படத்தை ஆர் கண்ணன் இயக்குகிறார். பரியேறும் பெருமாள் எடிட்டர் ஆர்கே செல்வா இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார்.

அதர்வா முரளி தற்போது மூன்று படங்களில் கமிட் ஆகியுள்ளார். தள்ளிப் போகாதே தவிர்த்து, ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். குருதி ஆட்டம் படமும், ருக்மணி வண்டி வருது படமும் சத்தமில்லாமல் இருக்கிறது. இவை பற்றிய அறிவிப்பு எதுவும் தற்போது வெளியாகவில்லை.

Advertisements

Next Post

கியூட்டாக சிரித்து, சினுங்கிய "அதுல்யா ரவி"... கொள்ளை கொள்ளும் பேரழகி புகைப்படங்கள்...

Wed Feb 19 , 2020
சமீபகாலமாக இளைஞர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்த நடிகை என்றால் அது நம்ம அதுல்யா தான். கொஞ்சும் அழகு, மழலை மாறாத சிரிப்பு என அத்தனை சிறப்பையும் அமையப்பெற்ற நடமாடும் தேவதை. இதுபோல் கூறி இளைஞர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதுல்யா தற்போது நாடோடிகள் 2, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார். […]
%d bloggers like this: