காய்ச்சல், மூச்சுத்திணறல், பிரபல வில்லன் நடிகர் மருத்துவமனையில் கவலைக்கிடம்… சோகத்தில் கோலிவுட்..!

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பாலா சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது திரையுலகினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவதாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பாலா சிங். அதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை, விருமாண்டி என பல படங்களில் தனது கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேடை நாடகக் கலைஞரான பாலா சிங், வில்லன் வேடம் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை அவர் நடித்த ஐந்து படங்கள் ரிலீசாகியுள்ளது. தற்போது 67 வயதாகும் பாலா சிங்குக்கு, சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. அதோடு மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால், அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலா சிங்கின் உடல்நிலை பற்றிக் கேள்விப்பட்ட திரையுலகினர் சோகமடைந்துள்ளனர்.

Advertisements

fogpriya

Next Post

விஜய்க்காக தயாராகும் கர்நாடகா மாநில சிறை..!

Wed Nov 27 , 2019
விஜய், மாளவிகா மேனன் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது.இதனை அடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய சிறைச்சாலையில் நடத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதி கர்நாடக மாநில அரசிடமிருந்து பெறப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும் ஓரிரு நாட்கள் […]

Actress HD Images

%d bloggers like this: