போராட்டம், வர்மக்கலை கிக் பாக்சிங்,தந்தை மகன் பாசம் என தனுஷின் “பட்டாஸ்” ட்ரைலர் ரிலீஸ்..!

தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட கேப் விடமால் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது “பட்டாஸ் ” படத்தில் நடித்து வருகிறார். செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் சொந்த மண்ணிற்காக ஒரு வர்மக்கலை வீரனாக அப்பா தனுஷ் போராடுவது போன்றும் , மகன் கிக் பாக்ஸர் போன்றும் கதை வடிவமைத்துள்ளனர்.

இந்த கோணத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் பார்த்து நம் கண்கள் பழகியிருந்தாலும் பட்டாஸ் படம் காதல் , தந்தை மகன் பாசம் , சொந்த மண்ணிற்கான போராட்டம், வர்மக்கலை,  கிக் பாக்சிங் உள்ளிட்ட பல அம்சங்ககள் உள்ளடக்கி உருவாகியுள்ளதால் ரசிகர் படம் பார்க்கும் போது நிச்சயம் ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisements

Next Post

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ டீஸர் வெளியானது..!

Tue Jan 7 , 2020
சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகிவருகிறது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’.  இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், […]
%d bloggers like this: