யோகி பாபுவுக்கு முதல் முதலாக கிடைத்த கல்யாணபரிசு..!! அதுவும் யாரிடமிருந்து தெரியுமா?

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சுபார்கவி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் ரகசிய திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பில் யோகி பாபு கலந்துகொண்டார். திருமணத்திற்கு பின் அவர் ஒன்று தான் முதன்முதலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து யோகிபாபுவுக்கு படக்குழுவினர் வாழ்த்துக் கூறினார்கள். யோகி பாபுவுக்கு நடிகர் தனுஷ் தங்கச் செயினை பரிசாக அளித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். யோகிபாபு திருமணத்திற்கு திரையுலகில் முதல் முதலாக பரிசு அளித்து வாழ்த்து தெரிவித்தவர் நடிகர் தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. யோகிபாபுவுக்கு தனுஷ் தங்க செயின் அணியும்
புகைப்படம் ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

"ஒரு குட்டி கத" மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!! விரைவில்...

Wed Feb 12 , 2020
கையில் ஜாக் டேனியல்ஸ் ஹிப் பிளாஸ்க். அந்த பிளாஸ்க்கை நடுஇவ்விரல் மடக்காமல் புடிக்கும் தோரணை. இந்த உலகத்தின் ஒலியை மறப்பதற்கு ஹெட் போன்ஸ். பலத் தேவையற்ற ஓளிகளை குறைப்பதற்கு கூலிங்க் கிளாஸ். கட்டம் போட்ட சட்டை, காக்கி கலர் பாண்ட், முகம் முழுக்க தாடி, ஒரு நாற்காலியில் தெனாவட்டாக உட்கார்ந்திருக்கும் விஜய். இப்படிப்பட்ட விஜயை இதற்கு முன் அவருடைய ரசிகர்கள் கண்டதில்லை. அதனால் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த […]
%d bloggers like this: