நடிகர் ‘கார்த்தி’ காட்டில் தொடர்ந்து பட மழை “ஹீரோ” பட இயக்குநரின் அடுத்த பட ஹீரோ இவர்தான்..!!

கைதி, தம்பி என இந்த ஆண்டு இரண்டு பெரிய வெற்றிகளை ருசித்துள்ள நடிகர் கார்த்தி காட்டில் தொடர்ந்து பட மழை தான்.தம்பி படத்தைத் தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி தான் ஹீரோ என்ற டாக் எழுந்துள்ளது.

இரும்புத்திரை படத்தின் மூலம் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குநர் பி.எஸ். மித்ரன், இந்த ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ எனும் பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், இரும்புத்திரை படத்திற்கு கிடைத்த அளவுக்கு ஹீரோ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் மிகப்பெரிய அளவுக்கு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனுக்கு கிடைக்கவில்லை. படம் நன்றாக இருக்கிறது என்று பிரபலங்கள் பாராட்டி வந்தாலும், விமர்சகர்களிடையே கலவையான விமர்சனத்தை ஹீரோ படம் பெற்றுள்ளது.

இந்நிலையில், பி.எஸ். மித்ரனின் அடுத்த படத்திற்கான ஹீரோ நடிகர் கார்த்தி தான் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி – பி.எஸ். மித்ரன் இணையும் இந்த படமும் சமூக அக்கறைக் கொண்ட வித்தியாசமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய்சேதுபதி, ஜெயம் ரவியை தொடர்ந்து பல படங்களில் நடிகர் கார்த்தியும் கமிட் ஆகி வருகிறார். சுல்தான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கும் புதிய படத்திலும் நடிகர் கார்த்தி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Next Post

தீபிகா படுகோன் நடிக்கும் "மகாபாரதத்தில்" இந்த ஹீரோ தான் கிருஷ்ணராக ஒப்பந்தம்...

Fri Dec 27 , 2019
தீபிகா படுகோன் திரவுபதியாக நடிக்கும் மகாபாரதம் படத்தில் ஹிர்த்திக் ரோஷன் கிருஷ்ணராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரமாண்ட பட்ஜெட்டில், மகாபாரதம் சினிமாவாகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இதற்காக அந்தந்த மொழி நடிகர்களை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த மெகா படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார். இவர் டங்கல் உட்பட சில படங்களை இயக்கியவர். தமிழில் அம்மா கணக்கு படத்தை இயக்கிய […]
%d bloggers like this: