‘கர்ணன்’படத்தில் தனுஷின் தோற்றம்…. இணையத்தில் வைரல் ….

கர்ணன் படத்தில் தனுஷின் தோற்றம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘அசுரன்’ படத்தை அடுத்து தனுஷ் நடித்துள்ள பாட்டாஸ் படம் 16 ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜின் படத்தில் நடித்து வருகிறார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். மலையாள நடிகர் லால், நட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திலும் தனுஷ் நெல்லை வழக்கில் பேசி நடிக்கிறார். திருநெல்வேலி அருகே பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்துக்கு, ‘கர்ணன்’ என டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் கதை, மாஞ்சோலை தொழிலாளர்கள் பற்றியது என்று கூறப்படுகிறது. இதில் உள்ளூர் இளைஞர்களையும் நடிக்க வைக்க முடிவு செய்த இயக்குனர் ஆடிஷன் நடத்தி சிலரை தேர்வு செய்துள்ளார்.

இதற்கிடையே, கர்ணன் படத் தலைப்புக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுகுறித்து நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன், தயாரிப்பாளர் தாணுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தில் தனுஷின் தோற்றத்தை நடிகர் லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் தனுஷ் அப்பாவியாக, லாலின் அருகில் நிற்கிறார். யேமன், கர்ணன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் லால். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

Advertisements

Next Post

ஐந்து குழந்தைகளுடன் ஹரிஷ் கல்யாண்..."தாராள பிரபு" பர்ஸ்ட் லுக் ரிலீஸ்...

Sun Jan 12 , 2020
தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் 5 குழந்தைகளுடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது ‘தாராள பிரபு’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி வகையை சேர்ந்த இந்த படம், […]
%d bloggers like this: