மீண்டும் விக்ரம்-வேதா பட நடிகை உடன் இணையும் மாதவன்….

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன், மீண்டும் நேர் கொண்ட பார்வை பட நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’. துல்கர் சல்மான் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது. 

இந்நிலையில், இந்த படம் தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார். மாதவனும், ஷ்ரத்தாவும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisements

Next Post

மாஸ்டர் செகண்ட் லுக் குறித்த அறிவிப்பு..

Wed Jan 15 , 2020
தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் தற்போது முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராகி வருவதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த […]
%d bloggers like this: