விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகர்..!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது புதிய படத்தை தமிழகத்தில் விளம்பரம் செய்ய பேட்டியளித்திருந்தார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மகேஷ் பாபு தனது கல்லூரி காலத்தை சென்னையில் தான் கழித்தார். சூர்யா, கார்த்தி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலருடன் சென்னை லயோலா கல்லூரியில் படித்த அனுபவத்தையும் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். 

பேட்டியின் இடையே ஸ்பைடர் படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஏ.ஆர். முருகதாஸ், விஜய், மகேஷ் பாபுவுடன் இணைந்து பணிபுரிய சம்மதம் தெரிவித்திருந்ததாகவும், அதற்கு உங்கள் பதில் என்ன என தொகுப்பாளர் கேட்க, தளபதி விஜய்யுடன் இணைந்து பணி புரிவதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். நல்ல இயக்குநர், சிறந்த கதை அமைந்தால் நிச்சயம் பண்ணலாம் என்றார். 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தை முன்னதாக விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ஆனால், கால்ஷீட் காரணங்களுக்காக அந்த கூட்டணி உருவாகவில்லை.  அந்த பேட்டியில் மகேஷ் பாபுவுக்கு பிடித்த தமிழ் இயக்குநர் யார் என்ற கேள்விக்கு சட்டென்று ஷங்கர் சார் என பதிலளித்தார்.

Advertisements

Next Post

என்ன அழகு!! அடேங்கப்பா... பூக்களுக்கே தேவதை ஆன தமன்னா..!!

Sun Jan 19 , 2020
Advertisements
%d bloggers like this: