நடிகர் பிரபுதேவா-வின் முதல் போலீஸ் படம் “பொன்மாணிக்கவேல்” ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

பிரபல நடிகர் பிரபுதேவா முதல் முதலாக போலீஸ் வேடத்தில் நடித்த பொன்மாணிக்கவேல் திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பொன்மாணிக்கவேல் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் பொங்கல் தினத்தில் ரஜினியின் தர்பார் படம் திரையிடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முகில் செல்லப்பன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். டி இமான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலரை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் பிரபு தேவாவிற்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Next Post

நடிகை சினேகா-விற்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா? மகிழ்ச்சியில் பிரசன்னா பகிர்ந்த ஃபோட்டோ..!!

Sat Jan 25 , 2020
தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்திருந்த ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது. இதனையடுத்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவின் வளைகாப்பு […]
%d bloggers like this: