அஜித்துடன் நடிக்க முடியாதது மிகுந்த கவலைதான்..!! பிரசன்னா உருக்கம்..!!

நடிகர் அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது மிகுந்த கவலையளிப்பதாக நடிகர் பிரசன்னா அறிக்கை வெளியிட்டுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தின் 60-வது படமாக ‘வலிமை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்க எச்.வினோத் இயக்குகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது

அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. அதையும் மீறி இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரசன்னா தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “வலிமை படத்தில் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்பி எனக்கு வாழ்த்து சொன்னீர்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மைதான். என்னுடைய திரைவாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்த வாய்ப்பு எனக்கு இந்தமுறை கிடைக்கவில்லை. விரைவில் தல அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என்று நம்புகிறேன். அஜித்துடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த கவலையளித்தாலும் உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டு விட்டேன்.” என்று பிரசன்னா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisements

Next Post

பிரபல நடிகை "அமலாபால்" வீட்டில் திடீர் என நடந்த சோகம்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

Wed Jan 22 , 2020
பிரபல நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் என்பவர் திடீரென இன்று மரணம் அடைந்துவிட்டது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை அமலாபால். இவரது நடிப்பில் உருவான ’அதோ அந்த பரவை போல’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அமலாபால் தந்தை […]
%d bloggers like this: