அஜித்திடம் கற்ற பெரிய பாடம்: ரசிகர்களை சந்தித்து பேசிய பிரபல மலையாள நடிகர்..

அஜித்திடம் கற்ற பெரிய பாடம் என்ன என்பது குறித்து ரசிகர்களிடம் கலந்துரையாடும்போது ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார். லால் ஜுனியர் இயக்கத்தில் ப்ரித்விராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாளப் படம் ‘டிரைவிங் லைசன்ஸ்’. நடிகருக்கும் அவரது ரசிகருக்கும் இடையே நிகழும் கதையே இந்தப் படம். இதனை விளம்பரப்படுத்த தன் ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடையக் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் ப்ரித்விராஜ்.

இந்த நிகழ்வில் ரசிகர் ஒருவர் அஜித் குறித்து ப்ரித்விராஜிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ப்ரித்விராஜ் அளித்துள்ள பதில் தான் தற்போதைய ட்விட்டர் ட்ரெண்ட்டாக இருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். “சொல்லப்போனால் என்னை விட சீனியர், என்னை விடப் பெரிய ஸ்டாரும்கூட. ஆனால் அறிமுகமான நாள் முதல் ‘அஜித், அஜித்’ என்றுதான் அழைத்து வந்தேன். அதனால் சொல்லும்போது ‘அஜித்’ என்றுதான் வருகிறது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் வாழ்க்கையில் முக்கியமான பாடத்தைப் படித்தது அஜித் சாரிடம் இருந்துதான்.

சில வருடங்களுக்கு முன் என் நண்பர், நடிகர் சூர்யா திருமணத்துக்குப் பிறகு புது வீட்டுக்குக் குடித்தனம் போனார். அந்தக் கிரகப்பிரவேசத்துக்கு என்னை அழைத்திருந்தனர். அந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, மாதவன், அஜித் சார் என்று எல்லோரும் வந்திருந்தனர். அந்த விழாவில் அஜித் சாரும் நானும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அவரோடு பேசிக்கொண்டிருந்த அந்த 2 மணிநேரத்தில் அவர் அவரது வெற்றியிலிருந்தும் தோல்வியிருந்தும் விலகி இருப்பவர் என்பது எனக்குப் புரிந்தது. அஜித் சாரின் ஒரு சினிமா தமிழ்நாட்டில் பெரிய வெற்றி பெற்றது என்பதில் அஜித் சாருக்குத் தலைகால் புரியாத சந்தோஷம் இருக்காது. அதுபோல் ஒரு படம் தோற்றாலும் அதிலும் அவருக்குப் பெரிய கஷ்டம் இருக்காது. இது ஒரு பெரிய பாடம். இதைத்தான் நான் பின் தொடர்கிறேன்.

நம் தொழில் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளில் இருந்தும் பெரிய தோல்விகளில் இருந்தும் நாம் விலகி இருக்க வேண்டும். ஒரு வெற்றி நம்மைத் தலைகால் புரியாமல் ஆக்கிவுடும். ஒரு தோல்வி நம் மனத்தைத் தளர்த்தும். சினிமா அப்படிப்பட்ட ஒரு துறை. இந்த இரண்டு விஷயத்தில் நாம் சிக்காமல் இருக்க வெற்றியிலிருந்தும் தோல்வியிலிருந்தும் நாம் விலகியே இருக்க வேண்டும். இதை நான் பகுத்தறிந்தது அஜித்திடம் இருந்துதான்”.இவ்வாறு ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisements

Next Post

"புத்தாண்டு" அன்றே பிறந்த நாள் கொண்டாடும் திரை பிரபலங்கள்..'தெறி' பேபிக்கும் இன்று தான் பிறந்தநாள்..

Wed Jan 1 , 2020
புத்தாண்டு என்றாலே மகிழ்ச்சி தான் அதுவும் புத்தாண்டு அன்றே பிறந்த நாள் என்றால் கேட்கவே வேண்டாம் இரட்டிப்பு மகிழ்ச்சி தான். இன்று இத்தனை பேருக்கு இ‌ந்த இரட்டிப்பு சந்தோஷம் கிடைச்சிருக்குனு தெரியுமா? புத்தாண்டோடு சேர்ந்து அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறுவோம். தெறி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் தான் நைநிகா. நடிகை மீனாவின் குழந்தையான நைநிகா தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் விஜய் உடன் […]
%d bloggers like this: