நடிகர் “ராகவாலாரன்ஸு”-க்கு 5 ரூபாய் டாக்டர் விருது..!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், சமூக ஆர்வலர், நடன இயக்குநர் என பன்முகங்களை கொண்டவர் ராகவா லாரன்ஸ் ஒரு நடிகராக தன் நடிப்பிற்காக பெறும்  விருதுகளை விட அந்நடிகரின் சமூக சேவைகளுக்காக பெறும் விருதுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் நடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருதை வழங்கி கெளரவித்திருக்கிறது தாயன்பு ட்ரஸ்ட்.


 சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவைசெய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி நடந்த விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் ராகவா லாரன்ஸிற்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மக்கள் சேவைக்காக சென்ற வருடம் நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னை தெரசா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் சேவைக்காக பெறும் விருதுகள் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் பொறுப்பை அதிகப்படுத்தி இருப்பதாகவும் லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

Advertisements

fogpriya

Next Post

"கீர்த்தி சுரேஷ்" சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்..!

Mon Dec 23 , 2019
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக பார்க்கப்படுகிறார். காரணம் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாககொண்டு தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழில் டப் செய்யப்பட்ட நடிகையர் திலகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இன்னொரு சாவித்ரி இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு சொல்லுமளவிற்கு அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கீர்த்தி […]

Actress HD Images

%d bloggers like this: