நீங்க ரொம்ப..திக்கி திணறும் ரஜினி… இருவருக்கும் இடையேயான ரொமான்டிக் காட்சி.. அசத்தலான தர்பார் புரமோ ரிலீஸ்..

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் புரமோ வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கூட்டணி முதல் முறையாக இணைந்து உருவாகியிருக்கும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடித்துள்ளார்.

தர்பார் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். ரஜினியின் 167வது படமான இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் உலகம் முழுவதும் வரும் 9-ம் தேதி முதல் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தர்பார் படத்தின் புரமோ இன்று வெளியானது.

ரஜினிகாந்த் – நயன்தாராவை மையப்படுத்தியே இந்தப் புரமோ உள்ளது. பின்னணி இசையுடன் காரில் இருந்து அட்டகாசமாய் இறங்கி வரும் ரஜினிகாந்த், நயன்தாராவிடம் நீங்க ரொம்ப… என எதையோ கூற வந்து தடுமாறுகிறார். அதற்கு நயன்தாரா சாரி எனக்கு உருது தெரியாது என்று கூற மீண்டும் திக்கி திணறுகிறார் ரஜினி. அப்போது இவரை இஎன்டிக்கிட்ட கூட்டிக்கிட்டு போங்க என்று கூறி இடத்தை காலி செய்கிறார் நயன்தாரா. இப்படியாக இருவருக்கும் இடையேயான ரொமான்டிக் காட்சிகளுடன் உள்ளது இந்த புரமோ. இதனை படத்தின் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புரமோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

Advertisements

Next Post

நடிகையுடன் காதல்.. நள்ளிரவில் புகைப்படத்தை வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்திய... இந்திய கிரிக்கெட் வீரர்...!!

Thu Jan 2 , 2020
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பண்டியா நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்த தன் காதல் விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார். நடாஷா ஸ்டான்கோவிக் என்ற செர்பிய நாட்டை சேர்ந்த நடிகையை தான் ஹர்திக் பண்டியா காதலித்து வருகிறார். தன் காதலை சரியாக 2020 துவங்கிய உடன் உலகுக்கு அறிவித்து அதிரடி காட்டி இருக்கிறார் அவர். நடாஷா ஸ்டான்கோவிக் தமிழ் படமான அரிமா நம்பி படத்தில் தோன்றி இருக்கிறார் என்பது ஆச்சரியமான […]

Actress HD Images

%d bloggers like this: