தர்பார் திரைவிமர்சனம் முதல் பாதி சூப்பர்… இரண்டாம் பாதி போர்…

ரஜினி ரசிகர்களை பொருத்த வரையில் ரஜினியை திரையில் பார்த்தாலே போதும் என்று சொல்வார்கள் .அவர்களுக்கு இந்த படம் முழு விருந்து தான் .மேலும் ரஜினியை தாண்டி வேறு எந்த விஷயமும் படத்தில் கிடையாது முழு படமே ரஜினிக்காக மட்டும் தான் என்று கூட சொல்லலாம் .

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான சுபாஸ்கரன் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து இருக்கிறார்.படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைத்து இருக்கிறார் .தர்பார் படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் ,சுனில் ஷெட்டி,யோகி பாபு, ஶ்ரீமன்,ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .

இந்த படத்தை மிக பெரிய பொருட்செலவில் சுபாஸ்கரன் தயாரித்து இருக்கிறார் .தற்போதைய நிலையில் தமிழகத்தில் மிக பெரிய தயாரிப்பு நிறுவனம் என்றால் அது லைகா தான் ,சுபாஸ்கரன் 450கோடிக்கு 2.0 படத்தை தயாரிக்கும் போதே தமிழகம் மிக பெரிய ஆச்சரியத்தில் ஆழ்ந்தது . அதன் பின் தற்போது இந்த நிறுவனம் தர்பார் படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது . நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கிய முருகதாஸ்யை வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறது. லைகா சுபாஸ்கரன் மறுமுனையில் பிரம்மாண்டமாக ஷங்கர் இயகத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகிறார் .

தர்பார் படம் இவ்வளவு எதிர்பார்ப்பு பெற்று இருப்பதற்கு காரணம் ரஜினியை தாண்டி இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் இருப்பதும் ஒரு காரணம் .தமிழ் சினிமாவில் சிறிய நாயகியாக அறிமுகமாகி தனது இரண்டாவது படத்திலே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா .படிப்படியாக வளர்ந்து தற்போது மிக பெரிய உச்ச நட்சத்திரமாக நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து இருக்கிறார் . இந்த படத்தில் அதிகமாக புடவையில் காட்சி அளிக்கிறார். அவருடைய பங்கு மிக குறைவு தான் இந்த படத்தில் என்றாலும் கொடுத்த வேலையை கட்சிதமாக செய்துள்ளார் . தர்பார் படக்கதை -முதல் காட்சியே ரஜினியின் அட்டகாசம் நிரைந்த ஆக்சன் சண்டை காட்சி தான் ,பட்டாசுகள் வெடித்து கோலகலமாக வந்த ரசிகர்களுக்கு முதல் காட்சியே விருந்து தான் .ரஜினியை டெல்லியில் இருந்து மும்பைக்கு போதை பொருள் மாபியா கும்பலை ஒளித்து கட்ட அனுப்புகிறார்கள் .அவர்களை அழிக்க மும்பை வருகிறார் ரஜினி ,ரஜினியின் பெயர் படத்தில் ஆதித்யா அருணாச்சலம், அவருக்கு ஒரு மகள் வல்லியாக அறிமுகமாகிறார் நிவேதா தாமஸ் .முதல் பாதி ரஜினி ,நயன்தாரா ,யோகி பாபு ,நிவேதா என்றே செல்கிறது .பல காட்சிகள் நகைச்சுவையும் காதல் கலந்தே செல்கிறது .

ஒரு பிரச்சனையில் ஆதித்யா முக்கியமான போதை பொருள் மாபியா கும்பலின் ஒருவனை கொள்கிறார். அவன் வில்லன் ஹரி சோப்ராவின் மகன் என்று பின்னர் தெரிய வருகிறது. இதனால் மிகவும் கோபமடையும் வில்லன் ஹரி சோப்பரா யார் அந்த போலீஸ் என்று தேட துவங்குகிறான் இங்கே படத்தின் இன்டர்வெல் வருகிறது .முதல் பாதி பெரிதாக போர் அடிக்காமல் சென்று விட்டது . சுனில் ஷெட்டி படத்தின் முக்கிய வில்லன் , காட்சிகள் மிக குறைவு , படத்தில் அவர் தனது நடிப்பால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து உள்ளார். ரஜினி உடன் அவர் மோதும் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. சண்டை காட்சிகள் அனைத்தும் பேசப்படும் குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை காட்சி. மொத்தத்தில் சுனில் செட்டி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். சுனில் ஷெட்டி முகத்தில் ஆக்ரோஷம், வில்லத்தனம் இன்னமும் கொஞ்சம் தேவை படுகிறது. பல நேரங்களில் டம்மி வில்லன் போல் வந்து போகிறார். சுனில் ஷெட்டி பீலிங் பிட்டி . இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் தான் ஹரி சோப்ரா . இரண்டாம் பாதி ஹரி சோப்ரா, ஆதித்யா மகளான நிவேதா தாமஸ்சை கொள்கிறான் .இந்த இடத்தில் ரஜினி மிக பெரிய மன உலைச்சலுக்கு ஆளாகிறார் . .தன் மகளை கொன்ற ஹரி ஜோப்ராவை தேடி செல்கிறார் ,அவனுடன் மோதவும் தயாராகுகிறார் அதற்கிடையில் சில பிரச்சனைகள், கடைசியில் ரஜினி வில்லனை வென்றாரா ? அது எப்படி என்பதே ரஜினியின் தர்பார் .

தர்பார் படத்தின் முதல் பாதி ஆக்சன் ,சென்ட்டிமெண்ட்,காதல் ,சண்டை மற்றும் காமெடி என்றே செல்கிறது.இரண்டாம் பாதி அப்படியே தலைகீழாக மாறுகிறது .ரஜினி மகள் இறப்பு அதை தொடர்ந்து நகரும் காட்சிகள் சுவாரஸ்யமான முறையில் ஏ.ஆர்.முருகதாஸ் ஸ்டைலில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தாலும் . லாஜிக் பிரச்சினைகள் படத்தின் சுவாரஸ்யத்தை கொஞ்சம் குறைகிறது .அதுவும் மொத்த கதையே மிக பழையமையான கதையாக இருக்கும் போது அதில் சுவாரஸ்யமான முறையில் இன்னும் பலமாக திரைக்கதை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .இரண்டாம் பாதி படத்தின் மிக முக்கியமான ஒன்று அங்கு கொஞ்சம் சருவல் ஏற்பட்டது படத்தை பலவீனமாக ஆக்கிவிட்டது . படத்தில் மிக முக்கியமாக பேசபடுவது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு. இந்திய திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் தன் காட்சி வடிவத்தில் ரசிகர்களை மயக்கும் ஒரு மாயாஜாலம் தெரிந்த நபர் மற்றும் முருகதாஸ் உடன் ஸ்பைடர் படத்திற்கு பிறகு இவரை முருகதாஸ் இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்ய வைத்தார் என்பது படம் பார்க்கும் பொழுது அனைவருக்கும் தெரியும். சந்தோஷ் சிவன் ரஜினி மற்றும் நயன்தாரா பலரை அழகாக காட்சி படுத்தியுள்ளார் என்பது பாராட்ட பட வேண்டி முக்கியமான விஷயம் . ரஜினியின் மகள் பெயர் வள்ளி , சைட் அடிக்கும் நயத்தாராவின் பெயர் லில்லி . இந்த இரண்டு பெண்களுக்கு நடுவில் யோகி பாபு கொடுக்கும் காமெடி கவுண்டர் டயலாக்குகள் சிரிப்பை கொஞ்சம் வர வைக்கின்றன . ரஜினியின் காஸ்டுயும்ஸ் அவ்வளவு அழகு, ஹேர் ஸ்டைல் , நடை உடை , பாவனை எல்லாமே மிகவும் அழகாக காட்டி உள்ளார்கள். ரஜினியின் போலீஸ் காஸ்டுயும் மற்றும் நவ நாகரீக இளமை தோற்றத்தில் பல காட்சிகளில் ரசிகர்களை மிகவும் கவர்கிறார். படத்தில் இடைவெளை வரை விறுவிறுப்பாக சென்ற திரைக்கதை அதன் பின் சற்றே தொய்வு ஏற்பட்டது. இரண்டாவது பாதியில் நடிகர் ஸ்ரீமன் அறிமுகமாகிறார், சில காட்சிகள் தான் அவருக்கு ஆனால் மனநிறைவுடன் செய்துள்ளார். அவர் நயன்தாராவின் பெரியப்பா பையனாக வருகிறார்.

தனது மகனை கொன்ற கோவத்தில் சுனில் செட்டி ரஜினியின் மகளை பழிவாங்க துடிக்கிறார் இதனை பல சண்டைகள் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகளுடன் சொல்லி இருக்கிறது செகண்டு ஹாப். ரஜினி எக்ஸசைஸ் செய்யும் காட்சிகள் அனைத்தும் வெறிதனம். சிலர் கண்டிப்பாக காமெடி மீம்ஸ் செய்வார்கள் என்பது உறுதி. இரண்டாவது பாதியில் வரும் ரயில் நிலையத்தில் ஒரு சண்டை காட்சி ரசிகர்களிடையே மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. அந்த சண்டை காட்சியில் அனிருதின் பின்னணி இசையில் தெறிக்க விடுகிறார். சண்டை முடிந்ததும் ரஜினி மற்றும் நிவேதா தாமஸ் தாக்கப் படுகிறார்கள். ரஜினி மருத்துவமனை செல்கிறார் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுகிறது, இதற்க்கு பிறகு தான் பல ட்விஸ்ட் அண்ட் டர்ன் . ஆனால் எல்லாம் நம்மால் கணிக்க கூடிய காட்சிகள் என்பது தான் மிகவும் வேதனை. போலீஸ் என்றாலே தன் குடும்பத்துக்கு எப்பவும் பிரச்சனை தான் என்பதை பல பல இந்திய சினிமா நமக்கு காட்டி உள்ளது . இந்த படத்திலும் முருகதாஸ் இந்த விஷியத்தை சொன்னது அர்த்த பழசாக தெரிகிறது .

இந்த படத்தின் கலை இயக்குனர் சந்தானம் , மும்பை பின்புலத்தில் நடப்பதால் படத்திற்கு அதிகம் இவரின் கலை தேவை பட்டது என்றே கூறலாம். இவரது கலையின் சேவை தர்பாருக்கு தேவை. கலை இயக்குநராக சந்தானம் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளார். மொத்தத்தில் ரஜினியின் தர்பார் பெரிதாக வெடிக்கும் என்று எதிர்பார்க்க பட்ட வெடி ,முதலில் எதிர்பார்த்ததை போல் வெடித்தாலும் போக போக சருக்கலை சந்தித்தது . ஒட்டு மொத்த ரஜினி ரசிகர்களும் இந்த படத்தை ரஜினிக்காகவும் , அவரது ஸ்டைலுகாகவும் கொண்டாடுவார்கள். லாஜிக் பார்க்காமல் மாஜிக் செய்யும் சக்தி ரஜினியின் திரைப்படங்களுக்கு நிறைய உண்டு. தர்பார் படமும் பல மாஜிக் செய்யும் என்று நம்புவோம்.

Advertisements

Next Post

சசிக்கலாவை சீண்டிய தர்பார்.... அனல் பறக்கும் வசனங்கள்...

Thu Jan 9 , 2020
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள தர்பார் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிக்கலாவை குறிப்பிடும் வசனம் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இன்று உலகமெங்கும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் தனது ரமணா முதல் தற்போதைய தர்பார் வரை பெரிய ஸ்டார் ஹீரோக்களை வைத்து சமூக நீதி, அரசியல் […]
%d bloggers like this: