திருமணம் ஆன கையோடு புது மாப்பிள்ளைக்கு அடித்த அதிர்ஷ்டம்..

நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இன்று திருமணம் நடந்த நிலையில் அவருக்கு ஒரு பெரும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். ஜெர்ரி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான சதீஷ், முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்திருக்கிறார். தனது டைமிங் சென்ஸ் மற்றும் ஹியூமர் சென்ஸால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் சதீஷ். இந்நிலையில் சதீஷுக்கு இன்றுதான் திருமணம் முடிந்தது. நேற்று மாலை நடைபெற்ற சதீஷின் திருமண வரவேற்பிலும் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா, ஜீவி பிரகாஷ், சிவா, நடிகை ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் சதீஷுக்கு கல்யாண பரிசை அறிவித்து திக்குமுக்காடச் செய்திருக்கிறது. அதாவது, ரஜினியின் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 168 படத்தில் சதீஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை சன்பிக்சர்ஸ் நிறுவனமும் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் சதீஷ்.

Meena and Kushboo join the cast of Thalaivar 168

ஏற்கனவே ரஜினியுடன் நடிகைகள் குஷ்புவும் மீனாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷும் இந்தப் படத்தில் நடிக்கிறார். அதேபோல் பிரகாஷ் ராஜ், சூரி என பெரிய பட்டாளமே தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் சதீஷும் தலைவர் 168ல் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertisements

fogpriya

Next Post

"குயின் வெப்சீரீஸ்’’ ஜெயலலிதாவின் கதை இல்லை… கௌதம் மேனன் விளக்கம்..!

Thu Dec 12 , 2019
குயின் ஜெயலலிதாவை பற்றிய கதையல்ல ” தி குயின் ” என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர் என்று கௌதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார். இவ்வலை தொடரை எடுக்க நினைக்கும் போது முதலில் எங்களுக்கு நினைவில் வந்தவர் ரம்யா கிருஷ்ணன் தான் என்றும் அவர் கூறியுள்ளார். எப்போதும் வெற்றிப்படங்களே கொடுக்கும் கௌதம் வாசுதேவ மேனன் அவர்கள் இப்போது ஒரு வெப்சிரீஸ் எடுத்து வருவது எல்லாருக்கும் தெரியும். போஸ்டர், ட்ரைலர்னு எல்லாத்தையும் […]

Actress HD Images

%d bloggers like this: