என்னை பெரிய ஆளாக்க வேணாம்.. உங்க வேலைய பாருங்க போதும்.. அமைச்சரிடம் எகிறிய நடிகர் “சித்தார்த்”

சென்னை: என்னை பெரிய ஆளாக்க வேண்டாம், உங்களின் வேலையை பார்த்தாலே போதும் என நடிகர் சித்தார்த் அமைச்சரை சாடியிருக்கிறார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்ததற்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் இந்த விவகாரத்தில் அவர் கடுமையாக சாடி டிவிட்டியிருந்தார்.ஜெயலலிதா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஒருபோதும் ஆதரித்திருக்க மாட்டார். அவர் இல்லாமல் அதிமுக நெறி தவறி சீரழிந்திருக்கிறது என்றும் டிவிட்டியிருந்தார் சித்தார்.

இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் சித்தார்த்தின் கண்டனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அவர் யார்? எந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என கேள்விமேலும் சிலர் விளம்பரத்துக்காக கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி அவர்களை பெரிய ஆளாக்க விரும்பவில்லை என்று கூறினார். அமைச்சரின் இந்த பதிலால் கடுப்பான சித்தார்த் அமைச்சர் ஜெயக்குமாரை விளாசி டிவிட்டியிருக்கிறார்.

அதாவது, அவர் என்னை யார் என்று கேட்கிறார். பிரச்சனையில்லை, 2014 ஆம் ஆண்டு அவருடைய அரசாங்கம்தான் எனக்கு 2014ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது கொடுத்தது. அவர்கள் அதை 2017 இல் அறிவித்தனர், இன்னும் எனக்கு விருது வழங்கவில்லை.மேலும் அக்கறையுடன் பேசும் வரி செலுத்தும் குடிமக்களை அவமதிப்பது உங்களை எங்கேயோ அழைத்து செல்லப்போகிறது பாக்ஸர் அங்கிள். நீங்கள் ஒன்னும் என்னை பெரிய ஆள் ஆக்க தேவையில்லை. உங்கள் வேலையைச் செய்யுங்கள். அது போதும். விரைவில் குணமடையுங்கள். என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisements

fogpriya

Next Post

விஷாலுடன் ஜோடி போட ரெடியான துருவ நட்சத்திரம் ஹீரோயின்..!

Sun Dec 15 , 2019
சென்னை: துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வரும் நடிகர் விஷால், அடுத்ததாக ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நாயகியாக நடித்துள்ள ரித்து வர்மா ஜோடி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டோலிவுட் நடிகையான ரித்து வர்மா நடிப்பில் வெளியான பெலி சூப்புலு படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. […]
%d bloggers like this: