வெங்கட்பிரபு அறிவிப்பு…’மாநாடு’ படத்தில் சிம்பு-வின் கேரக்டர் என்ன தெரியுமா?

சிம்பு நடிக்கவிருக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் இன்று மாலை 6 மணி முதல் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாகவும், மேலும் முக்கிய வேடத்தில் இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்ரிச்சர்ட் நாதனின் இயக்கத்தில் பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் உருவாகைருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு முதல்முறையாக ஒரு முஸ்லிம் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவருடைய கேரக்டர் என்ன என்பது குறித்து ரசிகர்கள் கருத்து கூறலாம் என்றும் தேர்வு செய்யப்படும் கேரக்டரின் பெயரை அறிவித்த ரசிகர் இந்த படத்தின் படப்பிடிப்பை பார்க்க அனுமதிக்கப்படுவர் என்றும் வெங்கட்பிரபு அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் சிம்புவுக்கு கேரக்டரை தேர்வு செய்யும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisements

Next Post

இந்த முறை தெலுங்கா... மீண்டும் 'வில்லன்' வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..! ஹீரோ யார் தெரியுமா ?

Fri Jan 17 , 2020
நடிகர் விஜய் சேதுபதி தனது வித்தியாசமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள நிலையில் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் கதாபாத்திரங்கள் பிடித்திருந்தால் வில்லனாக நடிக்கவும் தயங்குவதில்லை. ஏற்கனவே ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்திலும் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஒருமுறை வில்லன் வேடம் வேடத்தில் […]
%d bloggers like this: