ஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்…! “அயலான்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்….

அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஏலியனும் கையில் லாலிபாப்புமாக சிவகார்த்திகேயன்!ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காண்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயனும், அவருடன் ஒரு ஏலியனும் படுத்திருக்கிறார்கள். இருவரது கையிலும் லாலிபாப் மிட்டாய் உள்ளது. இருவரும் மிகவும் உற்சாகமாக சிரிக்கிறார்கள்.

கோலிவுட்டின் இளவரசன் என்று ரசிகர்களால் பாராட்டப்படும் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியிடப்பட்டது. முதல் படம் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் காலை 11 மணிக்கு வெளியானது. இரண்டாவது படம் அயலான். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 7.07 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisements

Next Post

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு!

Tue Feb 18 , 2020
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, அந்நாட்டுக்கு எதிராக 5 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. தற்போது, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. முன்னதாக நடைபெற்ற 5 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதற்கு பிதிலடி […]
%d bloggers like this: