சில்லுக்கருப்பட்டி டிரைலர் ரிலீஸ்..!

சென்னை: சமுத்திரகனி, சுனைனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.வரும் டிசம்பர் 27ம் தேதி இந்த படம் வெளியாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது.

டீஸர் மற்றும் டிரைலர் எப்போதுமே ஜெட் வேகத்தில் வந்து செல்லும். குறைந்த நிமிடத்தில் படத்தின் பல காட்சிகளை நிரப்பிக் கொண்டு ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் கொடுக்கும். சமீபத்தில் வெளியான ரஜினியின் தர்பார் டிரைலரையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆனால், மிகவும் ஸ்லோவாகவும் அழகாகவும், ஆழமான வசனங்களுடன் வெளியாகியிருக்கும் சில்லுக்கருப்பட்டி டிரைலரை ஒரு முறை மிஸ் பண்ணாம பாருங்க..

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது. வரும் டிசம்பர் 27ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை தற்போது நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சூர்யா ரசிகர்கள் இந்த டிரைலரை வைரலாக்கி வருகின்றனர்.சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிம்புவின் வானம் படம் போல, சில்லுக்கருப்பட்டி படத்தில் பலரது காதல் வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் அபிநந்தன் ராமனுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி என பல ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியுள்ளனர்.சிறு வயது முதல் முதியவர்கள் ஆனாலும் எல்லோர் மனதிலும் காதல் நீங்காமல் இருக்கிறது என்பதை கவிதையாய் இந்த படத்தின் டிரைலரே சொல்கிறது. நிச்சயம் படமும் இதைவிட ரசிக்கும்படியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

fogpriya

Next Post

மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உத்தரவு..!

Thu Dec 19 , 2019
பிரதமர் நரேந்திர மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டுகளை இடிக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேசம் கான்பூரில் நடைபெற்ற கங்கை நதி ஆணைய கூட்டத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது அங்குள்ள படிக்கட்டுகளில் அவர் ஏறி சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டு ஒன்றில் இடறி கீழே விழுந்தார். அவர் இடறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மோடி தவறி விழுந்த படிக்கட்டுகளை இடிக்க […]
%d bloggers like this: