சூர்யா-வின் ‘சூரரை போற்று’ படத்தின் முக்கிய அப்டேட்..

நடிகர் சூர்யா நடித்த ’காப்பான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’சூரரைப்போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் ஹரி இயக்கத்தில் உருவாகும் ஒரு அதிரடி ஆக்ஷன் குடும்ப சென்டிமென்ட் படத்திலும், அதனை அடுத்து கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் அனேகமாக இந்த படத்தின் டிரைலர் அல்லது இசை வெளியீட்டு தினம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது. சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும். இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.

Advertisements

Next Post

ஏ.ஆர்.முருகதாஸ் 'சந்திரமுகி 2' தொடங்க திட்டம்...முந்திக்கொண்ட சந்திரமுகி பட இயக்குனர்..

Wed Jan 1 , 2020
ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு இருந்த ‘சந்திரமுகி 2’ யோசனையைத் தெரிவித்திருக்கும் வேளையில், பி.வாசு அதன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது இதனிடையே, ’தர்பார்’ படம் […]

Actress HD Images

%d bloggers like this: