பல தலைகள் , பல முண்டங்கள் நம்மை மிகவும் மிரட்டும் , வெறித்தனம் காட்டும் சைக்கோ…

சைக்கோ படத்தின் முன்னோட்டத்தில் இருந்தே தெரிந்து விட்டது . இதற்கு முன் வந்த மிஷ்கின் படங்களின் எதிர்பார்ப்பை விட இந்த படத்தின் வெளியீட்டிற்காக தான் பல ரசிகர்கள் மிகவும் ஆர்வமாய் காத்து இருந்தனர் .அவர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே படம் தற்போது வெளியாகி இருக்கிறது . சைக்கோ படத்தை மிஷ்கின் இயக்கிஇருக்கிறார்.இந்தபடத்தில்உதயநிதி,அதிதி,நித்யா, சிங்கம்புலி ராம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் .படத்தை டபுள் மீனிங் புரடக்ஷன் நிறுவனம் தயாரித்து உள்ளது .

படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்து இருக்கிறார். இதுவரை கமர்சியல் படங்களாக நடித்து வந்த உதயநிதிக்கு இது ஒரு புது முயற்சி தான் .இதுவரை எந்த படத்திலும் போடாத உழைப்பை இந்த படத்தில் கொடுத்து இருக்கிறார். நிரைய இடங்களில் பாராட்டதக்க ஆச்சரியபட வைக்கும் நடிப்பையும் கொடுத்து இருக்கிறார். உதயநிதி படத்தில் போலீஸாக நடித்து இருக்கிறார் ராம் .இதுவரை நாம் ராமை கோபம் கொள்ளும் பதட்டப்படும் கதாபாத்திரங்களில் தான் பாத்திருப்போம் இந்த படத்தில் அதற்கு நேர்மாறாக பொருமை மிகுந்த கவனம் நிரைந்த போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார் .

படத்தில் வில்லனை முதலில் காட்டிய காட்சியிலே வித்தியாசத்தை காட்டியுள்ளார் மிஷ்கின். சைக்கோ என்றால் அது இப்படி தான் என்று ஒரு விளக்கமே கொடுத்துள்ளார் இயக்குனர். பல பெண்களை கொன்று அவர்களின் தலை வேறு உடம்பு வேறாக பிரித்து தனது சைக்கோ தனத்தை வெளிபடுத்துகிறார் வில்லன். வில்லன் கொலை செய்யும் விதம் கொலை செய்த பின் வில்லன் செயல் அனைத்தும் வெறிதனம். உள்ளாடைகளுடன் முண்டமாக நிறைய பிணங்கள் , அதை பல காட்சிகளில் நாம் பார்ப்பது மிஷ்கின்ஸ் டச். படத்தில் உதயநிதி கௌதம் என்ற கதாபாத்திரத்தில் வருகிறார்.தாகினி என்ற கதாபாத்திரத்தில் அதிதி நடித்து இருக்கிறார். நித்யா மேனன் கதாபாத்திரத்தின் பெயர் கமலா தாஸ்.நித்யா மேனன் ஏன் அதிதி ராவ் கதாபாத்திரம் வேண்டாம் என்று கூறி தற்போது அவர் நடித்து இருக்கும் கதாபாத்திரம் கேட்டார் என்று படம் பார்க்கும் பொழுது புரியும் . மிக தைரியமாக பல வசனங்களை நித்யா மேனன் பேசி கை தட்டும் வாங்குகிறார்.

திரைக்கதை மற்றும் அது எடுக்கபட்ட விதம் தான் படத்தின் மற்றொரு பெரிய பிளஸ் என்று கூறலாம். பொதுவாக மிஷ்கின் படங்களில் இதுதான் முக்கிய ட்ரண்டாக இருக்கும் என்றாலும் மிஷ்கின் வைக்கும் கேமரா ஷாட்ஸ் ஆங்கிள்ஸ் தனித்துவமாக இந்த படத்திலும் இருகிறது . படத்திற்கு ஒளிப்பதிவு தன்வீர் என்பவர் செய்து இருக்கிறார். மிஷ்கின் எண்ணிய எண்ணங்களுக்கு உயிரோட்டம் கொடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். மற்றும் படத்தை தாங்கிபிடித்த பங்கு இளையராஜாவிற்கு கட்டாயம் உண்டு .இளையராஜா மற்றும் மிஷ்கின் மூன்றாவது முறையாக இனைந்திருக்கும் படம் .பின்னனி இசை எதிர்பார்த்த அளவிலே இருந்தது .

படத்தின் பதட்டமான கதையோட்டத்திற்கு இளையராஜா இசை பக்கபலமாக இருந்தது என்றே சொல்லலாம். கதை என்ன தான் நகர்ந்தாலும் இளையராஜா கொடுக்கும் (பி ஜீ எம்) பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். ராஜாவின் இசையை ஏன் மிஷ்கின் நாடுகிறார் என்று படம் பார்க்கும் பொழுது அனைவருக்கும் தெரியும். ராஜா என்ற ஒரு பெயர் படத்தை பின்னணியில் தாங்கி பிடித்து இருக்கிறது. சித் ஸ்ரீராம் பாடிய உன்ன நினைச்சு பாடல் மிகவும் அழகாக எடுக்கப்பட்டு இருக்கிறது . பாடல் ரீலீசுக்கு முன்பே ஹிட். காட்சிகளிலும் பக்கா செய்துள்ளது நீண்ட நாள் நம் மனதில் நிற்கும். அன்பு என்ற ஒன்று இல்லாமல் பலரும் இது போல சைக்கோ ஆகின்றனர்.மிஷ்கின் இதில் சொல்ல வருவது ஒரு ஆண் அல்ல ஒரு பெண் தங்களது அடலசென்ஸ் ஸ்டேஜில் செய்யும் சில உடல் ரீதியான விசயங்களை பலர் கண்டிக்கும் போது அது அவர்களுக்கு ஆழமாக பதிந்து விடுகிறது. கண்டிப்பு என்ற ஒன்று கடுமையான தண்டிப்பாக மாறும் போது சைக்கோ வாக மாற காரணமாக இருந்து விடுகிறது .

கண் தெரியாமல் ஹீரோ உதயநிதி கார் ஓட்டும் காட்சி ஒரு பக்கம் ரசிக்க வைத்தாலும் , இன்னொரு பக்கம் கொஞ்சம் ஓவர் தான் யா இது என்று சொல்ல வைக்கிறது. ஆனால் அந்த காட்சிக்கு ராஜா சார் கொடுத்த இசை அபாரம் . இயக்குனர் ராமை சைக்கோ கொல்லும்போது கடைசி ஆசை என்று சொல்லி ஒரு பழைய பாடலை பாடுவதும் அதற்கு பிறகு வில்லனின் வெறித்தனமும் நம் மனதிற்குள் ஒரு பயங்கரத்தை உண்டாக்கும். அதிதி ராவ் அவ்வளவு அழகாக நடித்து இருக்கிறார் , பயப்படுவதிலும் உணர்வு ரீதியான காட்சிகளில் முக பாவங்களை மிகவும் அற்புதமாக செயற்கை தனம் இல்லாமல் செய்திருக்கிறார்.

பல தலைகள் , பல முண்டங்கள் நம்மை மிகவும் மிரட்டும் , பயப்படுத்தும் . வில்லன் முகம் மிகவும் சாதுவாக , ஜெண்டிலாக காட்ட பட்டாலும் படம் முடிந்தவுடன் நம் மனதில் அழுத்தமாக பதிவது என்னவோ அந்த ஒரு முகம் மட்டுமே. அந்த முகத்தின் ஆழ் மனதில் தோன்றிய விஷயங்களை இரண்டாம் பாதியில் மிஷ்கின் சொன்ன விதம் பல பேருக்கு புரியாமல் கூட போகலாம். ஆனால் சொல்ல வந்த விஷயத்தை மிகவும் தெளிவாக பட்டும் படாமலும் சொல்லி இருக்கிறார் இயக்குனர். இது ஒரு செக்ஸ் படம் அல்ல , செக்ஸ் சம்மந்த பட்ட அடல்ட் படம் . புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்தாலும் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். மிஷ்கின் ரசிகர்கள் இது போன்ற படங்களை மிகவும் கொண்டாடுவார்கள். இந்த படத்தின் கதை கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடப்பது போலவும் , சைக்கோவாக பாதிக்க பட்ட வில்லன் ஒரு கிறிஸ்த்துவ பள்ளியில் படித்ததாக வரும் காட்சிகள் கண்டிப்பாக பல சர்ச்சைகளை ஏற்படுத்த தான் போகிறது. மிஷ்கின் தான் அவை அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும் . அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் நன்று என்றே சொல்லலாம்.

வழக்கமான சைக்கோ படங்களை போல் தான் இதுவும் , பெரிய வித்யாசம் எதுவும் இல்லை ஆனால் எடுத்து கொண்ட கருத்தின் மைய புள்ளி தான் ஆழமாக யோசிக்க வைக்கும். மனோ ரீதியாக பாதிப்பட்ட சமூகம் தான் இப்படி பட்ட சைக்கோக்களை உருவாகிறது என்பதை உணர்த்தும் கதை. சுயஇன்பம் பற்றி பல முறை மிஷ்கின் மேடைகளிலும் பேட்டிகளிலும் பேசி உள்ளார் . இந்த முறை வித்யாசமான திரைக்கதையில் திரையில் சொல்லி உள்ளார். அந்த துனிச்சலுக்கு பாராட்டுக்கள். சாவடிப்பது சைக்கோ வேலை , இந்த படத்தை பார்ப்பது மட்டும் தான் நம் வேலை. யாரும் சைக்கோவாக மாறாமல் இருந்தால் சரி.

Advertisements

Next Post

குழந்தைக்கு அம்மா ஆனாலும்... இன்னும் கவர்ச்சி குறையாமல் இருக்கும் எமி ஜாக்சன்... கவர்ச்சி புகைப்படங்கள்..!!

Sat Jan 25 , 2020
நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார். […]
%d bloggers like this: