‘மாஸ்டர்’ அப்டேட்… விஜய்-விஜய்சேதுபதி படப்பிடிப்பு விரைவில்..! இயக்குனர் லோகேஷ் வெளியிட்ட தகவல்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி விஜய்யின் 64வது திரைப்படமான ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஒரு முக்கிய ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது விஜய் சேதுபதிக்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளதுஇந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஜீ சினிமா திரைப்பட விருது வழங்கும் விழாவில் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ’கைதி’ திரைப்படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை கமலஹாசன் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட லோகேஷ் கனகராஜ் பின்னர் பேசியதாவது:

விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இன்னும் 10 நாட்களில் படமாக்கப்பட உள்ளது. அந்த படப்பிடிப்பை நடத்த நான் மட்டுமின்றி படக்குழுவினர் அனைவருமே மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்’ என்று தெரிவித்தார். மேலும் ‘தற்போது விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு மேல் இந்த படம் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். லோகேஷ் கனகராஜ் தெரிவித்த இந்த தகவல் தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Advertisements

Next Post

சிலிர்க்க வைக்கும் நீலிமா..! !கவர்ச்சி போட்டோஷுட்...

Sun Jan 5 , 2020
சென்னை : சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வரும் நீலிமா ராணி புது போட்டோஷுட்டை வெளியிட்டுள்ளார். அதில் மெல்ல சிரிப்பு, கள்ள சிரிப்பு என்று மாடல் அழகி போல போஸ் கொடுத்துள்ளார். தேவர் மகன், பாண்டவர் பூமி, அன்பு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நீலிமா ராணி. இதைடுத்து ராதிகா சரத்குமார் நடித்த தெலுங்கு சீரியலில் அறிமுகமானர் நீலிமா, பின் தமிழில் ஒரு பெண்ணின் கதை மூலம் அறிமுகமானார். […]

Actress HD Images

Advertisements