நெய்வேலிக்கு பறந்த ஐடி டீம்…. இன்னோவா கார்..!! நடிகர் “விஜயை” ‘கொத்தாக’ அள்ளி சென்னை கிளம்பிய டீம்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அப்படியே தூக்கி காரில் உட்கார வைத்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட நடிகர் விஜயை வருமான வரித்துறை துருவி, துருவி விசாரித்து வருகின்றனர். சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர் ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, ‘பிகில்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட சம்பளம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட அவர்கள்,  விஜய்யிடம் விசாரிக்க முடிவு செய்தது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் மாஸ்டர் படத்தில் நடித்து வருவது தெரிந்தது. உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டான நெய்வேலிக்கு பறந்தது வருமான வரித்துறை டீம். மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி சுரங்கப் பகுதியில் நடந்து வருகிறது. எனவே, ஷூட்டிங் முடிந்தபிறகு நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு ஐ.டி தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப் படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நேரடியாக புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை தங்கள் காரிலேயே சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது அங்கு நடந்த காட்சிகள் தான் ஹைலைட். அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த சிஐஎஸ்எப் படை வீரர்கள், அவர்களை அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. பின்னர், என்எல்சி உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று, ஷூட்டிங் நடந்த பகுதிக்கு அவர்கள் சென்றனர்.

ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விஜய்க்கு சம்மன் அளித்து, விசாரித்தனர். ஆனால் மேலும் விசாரிக்க வேண்டும் என்று கூறி, தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் விஜயோ அசால்ட்டாக எனது காரிலேயே வருகிறேன், ஷூட்டிங் முடியட்டும் என்று சொல்லி இருக்கிறார். தலையை இடது, வலதாக ஆட்டிய ஐடி டீம், விஜயை தங்களது இன்னோவா காரிலேயே அலேக்காக பிக் அப் பண்ணி சென்னைக்கு கொண்டு வந்துவிட்டனர்.

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட விஜய்யிடம் பனையூரில் உள்ள இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலிகிராமம் மற்றும் நீலாங்கரை பகுதிகளில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த அதிரடி நடவடிக்கை விஜய் ரசிகர்கள் மத்தியில் திரையுலகத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.

Advertisements

Next Post

கலோரிகள் குறைந்து உடல் ஒல்லியாக வேண்டுமா..? இந்த 4 டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!!!

Thu Feb 6 , 2020
உடல்  எடை அதிகமாக   உள்ளவர்கள் எடையை  குறைக்க அதிகமாக ஜிம்மிலேயே  இருக்கின்றனர். மற்றொரு முறையாக  கடினமான உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால்  என்ன பாதிப்பு வரும் நீங்கள் நினைக்கலாம். கடினமான  உடற்பயிற்சிகளை நீங்கள் கையாளும் போது, அது உங்கள்  உடலை மிகுந்த அளவு பாதிக்கப்படுகிறது. இன்னும்  சிலர் காலை  உணவுகளை தவிர்க்கின்றனர், இப்படி  செய்தீர்கள் என்றால் உங்கள் உடல்  எடை அதிகரிக்குமே தவிர, குறைய செய்யாது. உங்கள்  உடலில் உள்ள  […]

Actress HD Images

%d bloggers like this: