தளபதி விஜயின் “மாஸ்டர்” படத்தின் இசை வெளியீடு எப்போது? எங்கே?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் ஒரு சில பேட்ச் வொர்க் படப்பிடிப்பு மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் அதுவும் இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க விருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் மாஸ்டர் படத்தின் டப்பிங் பணிகள் மிக விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரும் என்றும் அந்த அறிவிப்பில் யாரும் எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

மாஸ்டர்’ படத்தின் அடேட்டை அவ்வப்போது கேட்டுக்கொண்டிருக்கும் தளபதி விஜயின் ரசிகர்கள் இந்த அப்டேட் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனேகமாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வரும் 16ஆம் தேதி நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

Advertisements

Next Post

"அண்ணாத்த" படத்தில் நயன்தாராவு-க்கு இத்தனை கோடி சம்பளமா?

Sat Feb 29 , 2020
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் […]
%d bloggers like this: