சூர்ப்பனகையாக மாறிய சிவகார்த்திகேயன் பட நடிகை “ரெஜினா கெஸண்ட்ரா” பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!!

நடிகை ரெஜினா கெஸண்ட்ராவின் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது. ரெஜினா கெஸண்ட்ரா நடிக்கும் புதிய படத்தின் பெயர் சூர்ப்பனகை. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் ராஜூ இயக்கும் இந்த படத்தில் ரெஜினா வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை காணுங்கள்.

ரெஜினாவுடன் இந்த படத்தில் அக்ஷரா கவுடா, சதீஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு இசை சாம் சி எஸ். ஒளிப்பதிவு பிகே வர்மா, எடிட்டிங் சாபு ஜோசப். ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது எனவும், விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வரிசையாக வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

ரெஜினாவுக்கு தமிழில் பெரிய அளவில் வெற்றிப் படங்கள் எதுவுமில்லை. அவர் கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், சிவகார்த்திகேயனுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில்தான் ஓரளவுக்கு பிரபலமானார். அதன் பிறகு ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த வருடம் இவர் தமிழில் நிறைய படங்கள் செய்து வருகிறார். நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி உள்ளிட்ட படங்கள் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. சிம்பு தேவனின் கசட தபற, விஷாலுடன் சக்ரா, அருண்விஜய் – அறிவழகன் இணையும் படம் உள்ளிட்ட படங்களில் இந்த வருடம் நடிக்கவுள்ளார்.

Advertisements

Next Post

இந்தியாவில் "ஆப்பிள் ஐபோன்" விலை திடீர் உயர்வு... காரணம் இதுதான்..!!

Wed Mar 4 , 2020
ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களை பார்ப்பது என்பது அரிது. இந்தியாவில் பலவகை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய வகை மாடல் மொபைல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் எத்தனை ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை கையில் வைத்திருந்தாலும், ஐபோன் வைத்திருப்பவர் என்றால் அது தனி மதிப்புதான். ஐபோன் என்றவுடன் அனைவரும் அதன் விலை 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் தற்போது […]
%d bloggers like this: