“மாஸ்டர்” திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்: விஜய்யின் கன்னத்தில் முத்தமிட்ட விஜய் சேதுபதி இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகனன்,சாந்தனு ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தை குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒரு விருது வழங்கும் விழா ஒன்றில் அறிவித்துள்ளார். அதில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் முடியவுள்ளது என தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாஸ்டர் பட ஷூட்டிங் ஸ்பாட்டில், நடிகர் விஜய்க்கு, நடிகர் விஜய் சேதுபதி முத்தமிடும் ஒரு புகைப்படத்தை எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisements

Next Post

"பயத்தை விட சாவு மோசமானதில்ல".... "ஜிப்ஸி" டீசர் ரிலீஸ்..!!

Sun Mar 1 , 2020
குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.நடிகர் ஜீவா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட […]
%d bloggers like this: