சுந்தர்.சி-யின் அரண்மனை 3 படத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?அந்த ஹீரோயினும் இருக்காங்களாம்….

அரண்மனை 3 படத்தில் மேலும் சில நடிகர்கள், நடிகைகள் இணைந்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில், வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அரண்மனை. யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் சுந்தர் சியும் நடித்திருந்தார். பேய் படமான இது, கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது. அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார். இதில், த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் பேசப்பட்டது. இதை சுந்தர். சியின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருந்தது.

இந்நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை சுந்தர். சி இயக்கி, நடிக்க உள்ளார். இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக, ராஷி கண்ணா நடிக்கிறார். இவர் தமிழில், அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்தவர். இன்னும் இரண்டு ஹீரோயினும் ஒரு முன்னணி ஹீரோவும் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது.

இப்போது முதல் பாகத்தில் நடித்த ஆண்ட்ரியாவும் இதில் இணைந்துள்ளார். மற்றொரு ஹீரோயினிடம் பேசி வருகின்றனர். மற்றும் விவேக், யோகிபாபு உட்பட பலர் நடிக்க உள்ளனர்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் அல்லது மார்ச்சில் தொடங்க உள்ளது. அதற்கான வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் பேய் படம். இதில் நடிப்பது பற்றி ராஷிகண்ணா கூறும்போது, ‘அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களை பார்த்திருக்கிறேன். இதுபோன்ற ஒரு கதையில் நடிக்க எனக்கு ஆசை இருந்தது. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

Advertisements

Next Post

‘வலிமை’ படத்தின் நாயகி இந்த ஹீரோயினா... அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்...!!

Tue Jan 21 , 2020
அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிப்ரவரி முதல் வாரம் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பிலும் நாயகி கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்பதால் நாயகி யார் என்பது குறித்த முடிவை இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க அஜித்தை சுற்றியே […]
%d bloggers like this: