முதிர்ச்சியான வேடங்களில் நடிப்பது ஏன்?.. – நடிகை “ஐஸ்வர்யா ராஜேஷ்” ஓபன் டாக்..!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், முதிர்ச்சியான வேடங்களில் நடிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. அவரிடம் உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: தனா இந்த கதையை கூறும்போது வித்தியாசமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணன் தங்கை உறவு எப்படி இருக்கும் என்பதை அவர் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 
மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். இரண்டு படங்களிலுமே தங்கை கதாபாத்திரம் தான். ஆனால், இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ‘ஈசி’ பாடல் தான். 

ராதிகாவுடன் ஏற்கனவே ‘தர்மதுரை’ படத்தில் நடித்திருக்கிறேன். அவருடைய நடிப்பை மிகவும் ரசித்துப் பார்ப்பேன். இப்படத்தின் மூலம் இன்னும் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. ‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடிக்கும்போது எனக்கு வயது 22. இந்த சிறிய வயதில் யாரும் இதுபோன்ற முதிர்ச்சியான பாத்திரத்தில் நடிக்க முன்வரவில்லை. அதன்பிறகு தான் சிலர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். நான் எப்போதும், எனது கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டும்தான் பார்ப்பேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Next Post

வெறித்தனமான "மாஸ்டர்" மூன்றாவது லுக் போஸ்டர்..!!

Mon Jan 27 , 2020
விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் தயாரிக்கிறது. ஏப்ரலில் வெளியாகும் இந்த படத்தின் மூன்றாவது போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் முதல் […]

Actress HD Images

%d bloggers like this: