நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் “ராஜா ராணி” ஆல்யா மானசா… தீயாய் பரவும் அழகிய புகைப்படங்கள்…!

“ராஜா ராணி” சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். குளிர் 100 படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். இவர் தான் “ராஜா, ராணி” தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். அந்த சீரியலில் நடிக்கும் போதே இருவருக்குமிடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக கூறப்பட்டது.

அதையடுத்து இருவரும் உருகி, உருகி நடித்து வெளியிட்ட டிக்டாக், டப்ஸ்மாஷ் வீடியோக்கள் உண்மையை வெளிக்கொண்டு வந்தது. இதையடுத்து இருவருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் பெற்றோர்களை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சின்னத்திரையில் பிரபலமான இந்த காதல் ஜோடிக்கு அடுத்த பரிசாக ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக உள்ளார். 

சமீபத்தில் ஆல்யா மானசாவிற்கு வளைகாப்பு நடத்தப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா மானசாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் கறுப்பு நிற சுடிதாரில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா மானசா உடல் எடை அதிகரித்துள்ளார். சற்று குண்டாகியுள்ள ஆல்யாவின் உருவம்.ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தாலும், அம்மா ஆகப்போற ஆல்யாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஆல்யா மானசாவின் புகைப்படங்கள் இதோ.

Advertisements

Next Post

இவர்தான் காதலரா.. மிக நெருக்கமான புகைப்படம் .. கலக்கும் பிரியா பவானிசங்கர்..!!

Tue Jan 28 , 2020
நடிகை பிரியா பவானிசங்கர் தான் நெருக்கமாக இருக்கும் ஆண் ஒருவரை புகழ்ந்து பதிவிட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை பிரியா பவாணிசங்கர் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார் பிரியா பவானிசங்கர்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதன் மூலம் பெரும் பிரபலமானார் […]

Actress HD Images

%d bloggers like this: