பிரபல நடிகை “அமலாபால்” வீட்டில் திடீர் என நடந்த சோகம்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் என்பவர் திடீரென இன்று மரணம் அடைந்துவிட்டது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை அமலாபால். இவரது நடிப்பில் உருவான ’அதோ அந்த பரவை போல’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அமலாபால் தந்தை வர்கீஸ் பால் என்பவர் திடீரென நேற்று மாலை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவரது இறுதி மரியாதை நிகழ்ச்சிகள் இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமலாபாலின் தந்தை மறைவு செய்தியைக் கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Next Post

எந்த அம்பாளையும் நான் நம்பறது இல்லை..!! பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்...

Wed Jan 22 , 2020
தொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சியில் நடிக்கும் பல பேர் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு அவர்களின் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். சினிமாவில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் கொடுக்கபடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். […]

Actress HD Images

%d bloggers like this: