ரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தலைவா படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜய்யின் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு விஜய் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

அமலாபாலும் தானுண்டு சினிமா உண்டு என வாழ்ந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் கமர்ஷியல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஆடை அதோ அந்தப் பறவை போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.

amala-paul-marriage-01

சமீபத்தில் வெளியான புகைப்படம் உறுதி செய்துள்ளது. காற்று கூட புகமுடியாத அளவுக்கு தனது காதலரை இறுக்கி கட்டிப்பிடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன

வடநாட்டு இசைக் கலைஞரான பவிந்தர் சிங் என்பவரை அமலாபால் காதலித்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ஆனால் தற்போது திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை அவசரஅவசரமாக நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

Attitude-அ மாத்திக்கோங்க: நடிகர் "தனுஷ்" இளைஞர்களுக்கு வேண்டுகோள்..!!

Sat Mar 21 , 2020
Advertisements
%d bloggers like this: