அடவி படத்தில் காட்டுவாசி பெண்ணாக … ராட்சசன்,அசுரன் படங்களில் நடித்த அம்மு அபிராமி..!!!

ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி, அடுத்ததாக நடிக்கும் படத்தில் காட்டுவாசி பெண் வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் ரமேஷ் ஜி இயக்கும் அடவி திரைப்படத்தில் வருண் கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் கே.சாம்பசிவம் தயாரிக்கும் இப்படத்திற்கு சரத் ஜடா இசையமைக்கிறார். இயக்குநர் ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இம்மாதம் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

படம் பற்றி இயக்குநர் ரமேஷ்ஜி கூறியதாவது:‘இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த வினோத்தும், அம்மு அபிராமியும் மக்களை ஒன்று சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே கதை. சப்வே என்ற மலைவாழ் மக்களின் தெய்வத்தை படத்தின் திருப்புமுனைக்கு பயன்படுத்தியுள்ளோம்’. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Next Post

திடீரென மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த்... அரசியல் கட்சி அறிவிப்பது பற்றி ஆலோசனை...

Sat Jan 11 , 2020
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் நேற்று வெளியாகி ஒரு பக்கம் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் உடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அரசியல் […]

You May Like

%d bloggers like this: