பட வாய்ப்புகளே இல்லை… ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி..!!

திரைப்படங்கள் ஒரு பெரிய உருவம் பெறுவது சிறிய குறும்படத்தில் இருந்து தான். அது போல குறும்படத்தில் நடித்து கொண்டு இருந்தவர் ஹீரோயின் ஆக அறிமுகமாகினார். அவர்தான் அஞ்சலி. தனது கல்லூரி படிப்பில் இருந்தே குறும்படங்களில் அதிகம் நடித்து வந்தார் அஞ்சலி. அப்படி நடித்து வந்து கொண்டு இருந்த அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு படமான போட்டோ மற்றும் பிரேமாலேகா ராசா படங்களில் நடித்தார்.

பின் ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் நடித்து இன்று வரை நம் இதயங்களில் ஆனந்தியாக வாழ்ந்து வருகிறார்.இப்படத்தில் இவர் நடித்த ஆனந்தி கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.பின் பல படங்களில் இவர் நடித்தாலும் இவருக்கு பல பாராட்டுக்கள் பெற்று தந்த திரைப்படம் வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மற்றும் இப்படம் பல விருதுகளை குவித்தது.இப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி. சில படங்கள் சரிவை சந்தித்தன பல படங்கள் வெற்றியையும் சந்தித்தன.

இவர் நடித்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் இவருக்கு அங்காடி தெரு படத்திற்கு பிறகு இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது மற்றும் இப்படத்திற்காகவும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுதை பெற்றார். இதன் பின் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மாறி மாறி நடித்து வந்தாலும் இவருக்கு இதற்கு முன்பு கிடைத்த வரவேற்பு தற்பொழுது கிடைக்கவில்லை. ஆகையால் கவர்ச்சிபக்கம் குதித்து விட்டார் அஞ்சலி இவர் தற்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒரு பைக் அருகே நின்று கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் அஞ்சலி.

Advertisements

Next Post

‘வால்டர்’ படம் டீஸரை ரிலீஸ் செய்த பிரபல இயக்குனர்..!

Tue Dec 31 , 2019
சிபி சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் வால்டர் திரைப்படத்தின் டீஸரை நேற்று மாலை பிரபல இயக்குனர் வெளியிடுகிறார். யு. அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிக்கும் திரைப்படம் ‘வால்டர்’. சிபி சத்யராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படம் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் கதையாகும். இப்படத்தை 11:11 ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ஷ்ருதி திலக் தயாரிக்கிறார். இப்படத்தில் நட்டி நடராஜன் மற்றும் சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ஷிரின் கன்ச்வாலா, சனம் ஷெட்டி, […]

You May Like

%d bloggers like this: