அந்த நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை… உடனே ஓகே சொன்ன மற்றொரு பிரபல நடிகை.. உயர்ந்த சம்பளம்..புலம்பும் நடிகைகள்..!!

மூத்த நடிகருடன் நடிக்க உடனே ஓகே சொன்ன நடிகைக்கு படக்குழு சம்பளத்தையும் உயர்த்தியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் அண்மையில் ரூலர் என்ற படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் நடிகை வேதிகா, பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்திருந்தார்.இந்நிலையில் பாலகிருஷ்ணா தற்போது யோயபதி ஸ்ரீனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் சோனாக்ஷி சின்கா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவர் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து படக்குழுவினர் மற்ற நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பாலகிருஷ்ணா கோபக்காரர், அவருடன் நடிக்க பயமாக உள்ளது என்று கூறி நழுவி விட்டார்களாம். இந்நிலையில்தான் படக்குழுவினர் கேத்ரின் தெரசாவை தொடர்பு கொண்டுள்ளனர். அவரோ பாலகிருஷ்ணாவுடன் நடிக்க சட்டென ஓகே சொல்லி விட்டாராம்.

இதனால் சந்தோஷமடைந்த படக்குழு அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கேத்ரின் தெரசாவுக்கு ஒரே நேரத்தில் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்ததோடு, சம்பளமும் எகிறியிருக்கிறது. இதுதான் அதிர்ஷ்டம் போல என்று வாய்ப்பை தட்டிக்கழித்த நடிகைகள் புலம்பி வருகிறார்களாம்.

Advertisements

Next Post

பட வாய்ப்புகளே இல்லை... ஒய்யாரமாக போஸ் கொடுத்த அஞ்சலி..!!

Tue Dec 31 , 2019
திரைப்படங்கள் ஒரு பெரிய உருவம் பெறுவது சிறிய குறும்படத்தில் இருந்து தான். அது போல குறும்படத்தில் நடித்து கொண்டு இருந்தவர் ஹீரோயின் ஆக அறிமுகமாகினார். அவர்தான் அஞ்சலி. தனது கல்லூரி படிப்பில் இருந்தே குறும்படங்களில் அதிகம் நடித்து வந்தார் அஞ்சலி. அப்படி நடித்து வந்து கொண்டு இருந்த அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு படமான போட்டோ மற்றும் பிரேமாலேகா ராசா படங்களில் நடித்தார். பின் ராம் இயக்கிய […]

Actress HD Images

%d bloggers like this: